MYPNO.COM | பரங்கிப்பேட்டை சமூக வலைத் தளம்

ஊரின் முன்னோடி! உறவுகளின் உயிர்நாடி!!

Friday, Jan 27th

Last update:08:02:16 PM GMT

You are here:

நாளொன்றுக்கு ஒரு கேன்சர் நோயாளி: இந்திய மருத்துவச் சங்கம் பகீர் தகவல்!

மின்னஞ்சல் அச்சிடுக PDF

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, கடலூர் மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 40 சதவீதம் வரை அதிகமாக இருக்கிறது. கடலூர் ரசாயனத் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளால், சுற்றுச்சூழல் பெரிதும் மாசுபடுவதே இதற்கு முக்கியக் காரணம் என்று, இந்திய மருத்துவச் சங்கம் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டு உள்ளது.

ஏழைகளின் ஃப்ரிட்ஜ்!

மின்னஞ்சல் அச்சிடுக PDF
“ஓர் ஆள் சம்பளமே நூற்று ஐம்பது ரூபாய் தான். இதுல பஸ்சுக்கு மட்டும் எண்பது ரூபாய் கொடுக்கணும்னா நாங்க எங்க போறது ?” பரங்கிப்பேட்டையிலிருந்து காரைக்கால் செல்லும் பயணி ஒருவரின் கூற்று இது. பேருந்து கட்டணம் உயர்ந்தாச்சு. பால் விலையும் ஏறியாச்சு. தமிழக மக்களின் அடுத்த புத்தாண்டுப் பரிசு, மின் கட்டண உயர்வு.

63-வது குடியரசு தினம்:பரங்கிப்பேட்டையில் உற்சாகம்!

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பரங்கிப்பேட்டை: இந்திய திருநாட்டின் 63-வது குடியரசு தினம் பரங்கிப்பேட்டையில்  இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற அலுவலகத்தில், செயல் அலுவலர் ஜீஜா பாய் முன்னிலையில், பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன் உள்ளிட்ட அனைத்து பேரூராட்சி உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர்.

ஜமாஅத் தேர்தல்: விறுவிறு மாற்றம்!

மின்னஞ்சல் அச்சிடுக PDF

வாக்குப்பதிவு பிப். 12-ம் தேதி, ஞாயிறு

வாக்குப்பதிவு  இடம் மாற்றம்!

துண்டு பிரசுரத்திற்கு அனுமதி!! 

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பதவிக்கான தேர்தல் பிப்ரவரி 16ந் தேதி வியாழக்கிழமை நடைபெறும்  என்று நேற்று முன் தினம் செய்தி வெளியிட்டிருந்தோம். விடுமுறை தினத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசு - தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களும், வெளிநாடு வாழ் சகோதரர்களும் MYPNO மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

காலத்தின் கரங்களில்....

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பிரியத்தின் மென்விரல் மீது
படர்ந்திருக்கிறது
கோபமாய் பழுத்த
கொப்பளமொன்று!

செய்திக் கிருமியொன்று
செவியில் நுழைந்து
உறுத்தல் கொண்டு
உள்ளே குடைந்து..
செல்களை அரித்து
சிதைத்துச்  சீழுற்று...

ஜமாஅத் தேர்தல் பிப். 16: அதிகாரபூர்வ அறிவிப்பு!

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பிப்ரவரி 16 ஜமாஅத் தேர்தல்

பொதுக்கூட்டம், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்களுக்கு தடை!

உடனடி வாக்கு எண்ணிக்கை

பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் புதிய தலைவர் தேர்வு குறித்து தேர்வு கமிட்டியா அல்லது தேர்தலா என்கிற குரல்களுக்கு மத்தியில் கடந்த வாரத்தில் தேர்தல் குறித்து ஆடிட்டர் இலியாஸ் தலைமையில் தேர்வாணையம் அமைந்தது அறிந்ததே. இந்நிலையில், ஜமாஅத் தேர்தலில் அடுத்த கட்டம் சூடு பிடித்துள்ளது.

கேன்சரைப் போற்றுவோம்!

மின்னஞ்சல் அச்சிடுக PDF
My Photo

புற்றுநோய் எனப்படும் கேன்சரை நாம் வியாதி என்றுதான் பயத்துடனும், பதட்டத்துடனும் பார்க்கிறோம். இந்த கேன்சர் கிருமித் தொற்றால் வருவதில்லை என்பதையும் நாம் அறிவோம். உண்மையில் கேன்சர் என்பது செல்களின் கட்டுக்கடங்காப்  பெருக்கமே. இந்த செல் பெருக்கத்தினால் நாம் அடைந்துள்ள தீமைகளின் அதீத தாக்கத்தினால், வேதனையால், கேன்சரால் இதுகாறும் நாம் அடைந்துள்ள நன்மைகளை சற்றும் நினையாது பாரா முகமாய் இருக்கிறோம் என்பதே உண்மை.

மாவட்ட ஆட்சியருக்கு பேரூராட்சி மன்ற தலைவர் வாழ்த்து..!

மின்னஞ்சல் அச்சிடுக PDF

 

கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த அமுதவள்ளி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் துறை துணை செயலராகவும், மீன்வளத்துறை இயக்குநராக இருந்த ராஜேந்திர ரத்னூ கடலூர் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டனர். கடலூர் மாவட்ட புதிய ஆட்சியராக ராஜேந்திர ரத்னூ நேற்று முன் தினம் பொறுப்பேற்றார். இன்று காலை  பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ்,  கடலூர் மாவட்ட புதிய ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ-வை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும்  வாழ்த்து தெரிவித்த....

இரயில்வே நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் இரயில் மறியல்!

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பரங்கிப்பேட்டை: கடந்த சில நாட்களாக பரங்கிப்பேட்டை இரயில் நிலையத்தில் மின் விளக்குகள் எரியாமல் இருந்து வருகிறது. இதனால் இரவு நேரத்தில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 6.45 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற பயணிகள் இரயில் பரங்கிப்பேட்டை வந்தடைந்தது.

சில நொடிப்பொழுதுகள் மட்டுமே நிற்கும் தருணத்தில் பரங்கிப்பேட்டைக்கு வந்திறங்கிய ஒரு குடும்பத்தினர் இறங்க முற்பட்டபோது,

பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் சஸ்பெண்ட்!

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பரங்கிப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டாக பணி புரிந்து வரும் கோமதி சக்தி ஸ்வரூப்  லஞ்சப்புகாரின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், 5ல் கோமதி, மாஜிஸ்திரேட்டாக பணிபுரிந்த போது, சேலத்தைச் சேர்ந்த நிர்மலா& கம்பெனி வழக்கில், ஆவணங்களை திருத்தி லஞ்சம் பெற்றதாக, கம்பெனி நிர்வாகத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் செய்தார்.

 

ஜமாஅத் தலைவர் தேர்தல்: பிரசாரத்தை துவக்கினார் டாக்டர்..!

மின்னஞ்சல் அச்சிடுக PDF

 பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பதவிக்கான தேர்தல் பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருக்கிறது.  தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத சூழ்நிலையில் டாக்டர் எஸ்.நூர் முஹம்மது முதலில் தனது பிரசாரத்தை துவக்கி இருக்கிறார்.

நிவாரணம் மனநிறைவில்லை: எஸ்.எம். பாக்கர்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பரங்கிப்பேட்டை: தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட பகுதிகளை முன்னரே பார்வையிட்டு சென்ற இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ) அமைப்பின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் இன்று பரங்கிப்பேட்டையில்  நிவாரண உதவிகளை வழங்கினார். பரங்கிப்பேட்டை வாத்தியாப்பள்ளியில் INTJ மாநில தொண்டரணி செயலாளர் யூனுஸ், மாவட்ட செயலாளர் ஹமீது கவுஸ், மாவட்ட பொருளாளர் நஸ்ருத்தீன், நகர தலைவர் எஹ்யா மரைக்காயர், நகர பொருளாளர் ஹாஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் புயலால் பாதிக்கப்பட்ட  100 குடும்பத்தினர்களுக்கு INTJ சார்பில் தலா....

தானே புயல் பாதிப்பு: TNTJ இரண்டாம் கட்ட நிதியுதவி

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பரங்கிப்பேட்டை: தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு முதற்கட்ட நிவாரண  உதவிகளை உடனடியாக முன்னெடுத்து சென்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) அமைப்பின் சார்பில் இன்று இரண்டாம் கட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இன்று மாலை சுமார் 4.30 மணியளவில் பரங்கிப்பேட்டை TNTJ  மர்கஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருநூறு குடும்பத்தினர்களுக்கு தலா ரூ.2,000/- நிதியுதவி வழங்கப்பட்டது.

விலகல் முடிவை வாபஸ் பெற்றார் ஆடிட்டர் இ.மு. இல்யாஸ்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

கடந்த வாரம் நடைபெற்ற பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் செயற்குழுவில்,  பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பதவிக்கான தேர்தலுக்காக அமைக்கப்பட்ட ஐந்து நபர்கள் அடங்கிய தேர்தல்ஆணையத்தின்தலைமை பொறுப்பில் ஆடிட்டர் இ.முஹம்மது இல்யாஸ் நியமிக்கப்பட்டார்.

ஆயிஷா ரெடிமிக்ஸ் கான்க்ரீட் - திறப்பு விழா

மின்னஞ்சல் அச்சிடுக PDF

 

பரங்கிபேட்டை: பரங்கிபேட்டை - புதுச்சத்திரம் ரெயில்வே கேட் அருகே "ஆயிஷா ரெடிமிக்ஸ் கான்க்ரீட் " என்ற புதிய தொழிற்சாலை துவக்க விழா நடைபெற்றது. பரங்கிபேட்டையிலேயே முதல் முறையாக இத்தகைய நவீன சிமென்ட் கலவை தொழிற்சாலை துவங்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் சிமண்ட் கலவை முறையை விட பல மடங்கு மேம்பட்டதும், கணினி தொழில்நுட்பத்துடன் மிகவும் துல்லியமான அளவீடுகளில் சிமண்ட் - மண்- ஜல்லி - தண்ணீர் ஆகியவையை சரியான விகிதங்களில் கலக்கும் தொழில்நுட்பமும் கொண்ட தொழிற்சாலை இது. 

 

பக்கம் 1 - 72

அறிவியல்

மருத்துவம்

பொது

கல்வி