Tuesday, Sep 07th

Last update:07:11:54 PM GMT

You are here:

கெட்ட பழக்கங்களும் நாமும் - பகுதி 2

மின்னஞ்சல் அச்சிடுக PDF

  லஜ்ஜை இல்லாத மனிதர்கள்...!

அவர் சின்ன ராஜீவ்காந்தி மாதிரி அவ்வளவு அழகாக இருப்பார். எஞ்சினியர். நல்ல சம்பளம். நல்ல பதவி தான். கனடாவில் சிடிஜன்ஷிப் கூட வாங்கி இருக்கிறார். நன்றாகவும் பழகுவார்.

இருந்தாலும் அவருடன் கை குலுக்க எங்களுக்கு சுணக்கம்.

அவர் உபயோகிக்கும் பொருள்களைத் தொட ஒரு தயக்கம்.

வேறு ஒன்றும் இல்லை. சும்மா விரலை வைத்து கொண்டு பூந்து விளையாடுவார் மனுஷன்.

எல்லாரும் பார்க்கிறார்கள் . நாம் பப்ளிக்கில் இருக்கிறோம் என்று கூட தெரியாமல் - மூக்கு காது கண்ணு வாய்க்குள் என்று அவர் விரல் நுழையாத இடங்களே இல்லை. அவர் படித்த படிப்பும் - அவர் வயதுக்கு ஏற்ற அனுபவமும் அந்தப் பழக்கத்திலிருந்து அவரை காப்பாற்றவில்லை.

சில பெண்கள் கூட தலையை சொறி சொறி என்று சொரிந்து விட்டு நகக்கண்ணில் அழுக்கு இருக்கிறதா என்று பார்ப்பார்கள்..

சிலர் பல்லிடுக்கில் மாட்டிகொண்ட மட்டன் ஸ்லிப்பை விரல் விட்டு தேடி இழுத்து கையில் எடுத்து பார்ப்பார்கள்.

உவ்வேக்..

என் சித்தி வீட்டில் டிவி வந்த புதிது , பக்கத்துக்கு வீட்டுப்  பொண்ணு, சித்தி வீட்டு நடுஹாலில் சப்பரமாய் உட்கார்ந்து சீரியல் பார்த்துக் கொண்டிருந்தது.

சின்ன தூக்கத்துக்கு பிறகு ரூமிலிருந்து வெளியே வந்து - ஹாலில் தரையில் உட்காந்திருந்த அப்பெண்ணை பார்த்த நான் அதிர்ந்து போனேன்.

அந்த பெண் உட்காந்திருந்த நிலையிலேயே உடம்பு வெட்டி வெட்டி இழுத்துக் கொண்டிருந்தது.

அடுப்பங்கரையில் அப்பளம் பொரித்துக் கொண்டிருந்த சித்தியிடம் ஓடிப் போய் விசயத்தைச் சொல்ல - சட்டுவத்துடன் ஓடி வந்து பார்த்தால் -

டென்சனில் நகத்தைக் கடித்துக் கடித்து இழுத்துக் கொண்டிருக்கிறாள்.

எனக்குத் தான் முதுகில் ரெண்டு விழுந்தது

Write comment
Your Contact Details:
 
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security Please input the anti-spam code that you can read in the image.

!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved."