Friday, Sep 10th

Last update:08:22:00 PM GMT

You are here:

மாநாட்டு உரையிலிருந்து...

மின்னஞ்சல் அச்சிடுக PDF

அப்துல் காதிர் மதனி: தனக்கே உரிய பாணியில் பேசத் தொடங்கியவர், குடும்பவியல் குழந்தைவளர்ப்பு நவீன சீர்கேடு பற்றி பேசினார்.  இன்றைய குடும்பங்கள் யாருக்கும் முன்மாதிரியாக இருப்பதில்லை என்று ஆதங்கப்பட்டார். நமது அக்கம்பக்கத்தில் ஏற்படும் சீர்கேடுகளை தடுக்க நாம் முனைவதில்லை. எப்படி பக்கத்தில் தீ பிடித்தால் தீயணைக்க ஓடுவோமோ அது போன்று சமூக சீர்கேடுகளை அழிக்கவும் முன்வரவேண்டும்  என்று கூறினார். சமூகத்தின் மீதுள்ள மக்களின் பொறுப்புகள் குறித்து சமுதாயத் தலைவர்களின் பொறுப்புகள் குறித்தும் சரமாரியாக சாடினார்.

முஹம்மது யூனுஸ்: தொடக்கத்திலும் பின்பு இரண்டாவது அமர்வில் தலைமையுரையாற்றினார். பெற்றோர்கள் மாநாடு குறித்து பேசியதோடு

ஜமாஅத் சந்திக்கும் குடும்பவியல் பிரச்சினைகள் குறித்தும் பேசினார். ஒவ்வொரு குடும்பத்தின் தனிப்பட்ட பிரச்சினைகள் எந்த அளவிற்கு அதன் இரகசியம் காக்கப்படுகிறது என்பதில் இதன் பாரம்பரியம் அடங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். இஸ்லாம் கூறும் குடும்பவியலை செயல்படுத்துவதற்காகவே இந்த ஜமாஅத் வரதட்சனை போன்ற எத்துனையோ கட்டுப்பாடுகளை அழகாக பின்பற்றி வருகிறது என்பதினை தனது உரையில் நினைவு கூற தவறவில்லை.
சதீதுத்தீன் பாகவி: 2-வது அமர்வில் பேசத் தொடங்கினார். இன்றைய சமுதாயம் எந்த அளவிற்கு கடந்த சமுதாயத்தைவிட சீர்கெட்டு போய்விட்டது எனபதை பல மேற்கோள்கள் மற்றும் உதாரணங்களுடன் கூறினார். இன்றைய தலைமுறையின் ஒழுக்கவியல் மாற்றங்களை எடுத்துரைத்து அதன் காரணிகளையும் விளக்கினார். முந்தைய சமுதாயத்தோடு இன்றைய சமுதாயத்தை (குறிப்பாக பெண்களை) ஒப்பிட்டு காட்டி, இதில் நாம் எந்த அளவிற்கு  மாறுபட்டு இருக்கிறோம் என்று உதாரணங்களோடு பேசியது சிறப்பம்சம்.
Write comment
Your Contact Details:
 
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security Please input the anti-spam code that you can read in the image.

!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved."