Friday, Sep 10th

Last update:08:22:00 PM GMT

You are here:

இன்னும் நெடுந்தூரம் பயணிக்கவேண்டும் - CMN சலீம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
காலமாற்றத்தினால் சிக்கியுள்ளோம், இதன் தீர்வு என்ன? என்ற 'கரு'வில் பேசத் தெடங்கினார் CMN சலீம். இந்த பரங்கிப்பேட்டை மட்டுமின்றி எல்லாருமே இன்றைய சமூக மாற்றத்தில் பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். இதற்கு இந்த மாநாடு, தீர்மானங்கள் தீர்வா? என்றால் நிச்சயம் தீர்வாகாது என்றதுடன் இதை அறிவுப்பூர்வமாய் தீர்வு காண நல்ல விதையை நாம் நட்டுச் செல்ல வேண்டும் என்றார். 

சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை காண நாம் இன்னும் நெடுந்தூரம் பயணிக்கவேண்டும்; இதற்கு காலம் தேவைப்படுகிறது என்றதுடன் இதற்கான சரியான தேர்வு கல்வி என்று குறிப்பிட்டு கல்வியினால் மட்டுமே சமூக மாற்றத்தினை கொண்டு வர முடியும்;  அதற்கான நல்ல விதையை நாம் விதைக்க வேண்டும் என்றார்.

கலாச்சார சீர்கேடு காரணமாய் முதலாளித்துவம் விதைத்த கல்வி முறையை நாம் இன்று அறுவடை செய்வதால் இன்றைய கல்விமுறையால் வறண்ட மூளைகளுடன் சாறு பிழியப்பட்ட சக்கைகளாய் இன்றைய மாணவர்கள் உருவாக்கப்படுகின்றனர்.

பொருள் சார்ந்த சொகுசு சார்ந்த வாழ்க்கை முறையை அது பின்பற்ற வைக்கிறது; இதற்கான தீர்வு என்ன என்பதை மட்டும் நாம் சிந்திக்க வேண்டும் என்றார்.

இத்தகைய மாற்றங்கள் ஆரம்ப காலத்திலிருந்து நிச்சயம் கிடையாது ஏனெனில் நமது முந்தைய கல்வி முறை மிகச்சிறந்ததாகவும் உலகிற்கே முன்னோடியாகவும் இருந்து வந்தது. கடந்த 150 வருடங்களில்தான் நாம் கால மாற்றத்தினால் மாறியுள்ளோம் என்றும், அதன் வரலாற்றையும் மேற்கோள் காட்டினார்.

பள்ளிவாசல்களில் ஆரம்பப் பாடசாலை (மக்தப்), மேனிலைப்பள்ளி (மதரஸா), கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் (ஜாமிஆ) என்று ஆரம்ப காலத்தில் நமது கல்வி முறை அரசியல், அறிவியல், குடும்பவியல், சட்டம், நீதி என்று எல்லா துறைகளும் பயிற்றுவிக்கப்பட்டது. பின்பு ஏற்பட்ட மாற்றங்கள் தான் இன்றைய மதரஸா கல்வி முறை மார்க்க கல்வி உலக கல்வி என்று பிரித்து பார்க்கத் தொடங்கியது என்று வரலாற்று மாற்றங்களை குறிப்பிட்டு பேசினார்.

நல்ல சமூக மாற்றத்திற்கும் கலாச்சாரத்திற்கும் நல்ல விதையை விதைக்க வேண்டும், நல்ல ஒழுக்கம் தந்தையின் வழியாக மட்டுமே பிள்ளைகளுக்கு கிடைக்க முடியும், நாம் பிழைப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்கிறோம், ஆனால் பிழைப்புக்காக வாழ்க்கையை தொலைத்துவிடக்கூடாது என்று கூறினார்.

Write comment
Your Contact Details:
 
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security Please input the anti-spam code that you can read in the image.

!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved."