Tuesday, Sep 07th

Last update:07:11:54 PM GMT

You are here:

பெற்றோர்கள் மாநாட்டு தீர்மானங்கள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

 

பரங்கிப்பேட்டை: நேற்று மஹ்மூதியா ஷாதி மஹாலில் இஸ்லாமிய பெற்றோர்கள் மாநாடு சிறப்புடன் நடைபெற்றது. மாநாடு இறுதியில் கல்விக்குழு தலைவர் ஹமீது மரைக்காயர் மாநாட்டுத் தீர்மானங்களை வாசித்தார்.

 

தீர்மானங்கள்:-

* சமுதாயப் பெண்கள் நலன் கருதி படிக்கும் மாணவிகளுக்கு ஹிஜாப் குறித்து விழிப்புணர்வு செய்வதும், வகுப்பறைகளில் குறைந்தபட்சம் முக்காடு அணிந்து இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துவது. மேலும் இது குறித்து ஜமாஅத் தலைவர் வழியாக பள்ளி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுப்பது.

* நமது ஊர் பெண்கள் பள்ளியில் அதிகமான ஆண் ஆசிரியர்கள் இருப்பதும், கடந்த காலங்களில் ஒரு சில பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, பெண்கள் பள்ளியில் கணிசமான ஆண் ஆசிரியர்களை எடுத்துவிட்டு பெண் ஆசிரியர்களை கொண்டுவருவதற்கு முயற்சிக்கும்படி நமது ஐக்கிய ஜமாத் தலைவர் அவர்களை கேட்டுக்கொள்கின்றோம்.

* இளைய சமுதாயத்தினரிடையே மொபைல் போன்களால் ஏற்படும் தீயவிளைவுகளைக் கருத்தில்கொண்டு, எந்த வகுப்பு மாணவர்களும் பள்ளிக்கு மொபைல் எடுத்து வரக்கூடாது என்று அறிவுறுத்துமாறு பெற்றோரையும் பள்ளிகளையும் கேட்டுக்கொள்கிறோம்.

* மாதம் ஒருமுறையோ அல்லது இருமாதங்களுக்கு ஒருமுறையாவது பெற்றோர்கள் ஆசிரியர் ஆலோசனைக்கூட்டம் நடத்தி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒரு ஒருகிணைப்பை ஏற்ப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று பள்ளி நிர்வாகிகளையும் பெற்றோர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

* பெரும்பாலும் நம் பிள்ளைகளின் சீர்கேடுகளுக்கு தொலைக்காசியும் இணையதள வசதியுடன் கூடிய கணிப்பொறியும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆதலால், வீடுகளில் தொலைக்காட்சி பார்க்கும்போது நம் பிள்ளைகளின் படிப்பிற்கும் ஒழுக்கத்திற்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பெற்றோர்கள் பார்த்துக்கொள்ளும்மாறும் பிள்ளைகள் கணினியை பயன்படுத்தும் போதும் அவர்களை கண்காணிக்குமாறும் இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

* நமது ஊரில் பல மாதங்களுக்கு முன்னாள் இருந்த ஒரே ஒரு உடற்பயிற்சி கூடமும் உடற்பயிற்சி தளவாடங்களும் தற்போது இருக்கும் இடமே தெரியவில்லை!. இருக்கக்கூடிய மக்களையும் இன்னும் வரக்கூடிய சந்ததிகளையும் வலிமையான சமுதாயமாக உருவாக்க ஒரு சிறந்த உடற்பயிற்ச்சிக்கூடத்தை உருவாக்கி கொடுக்குமாறு நமது பஞ்சாயத்துபோர்ட் தலைவரும்,ஐக்கிய ஜமாத் தலைவருமான யூனுஸ் அவர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

* நமதூர் பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள டாஸ்மாக் கடையால் தினந்தோறும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் மற்றும் வெளியூர் செல்லும் அணைத்து தரப்புமக்களும் பாதிக்கப்படுவது நாம் அறிந்ததே. அங்கு குடித்துவிட்டு தகாத வார்த்தைகள் பேசுவதும், தகாத முறையில் நடந்துக்கொள்வதும் அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது. இது போன்ற சமுதாய அக்கறையற்ற குடி மக்களை கண்டிப்பது மட்டும் அல்லாமல், சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து அந்தக் கடையை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு நமது ஜமாத் தலைவரை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

  • muja  - Petrorgal manaadu
    theermaanangal Ezhuthiyavarko..Inga website il upload seithavaruko..purinthirukum therinthirukum..aa
    nal pengaluku kuripaaga thaai maargaluku..puriyavillai..(purinjika murppadavillai enbathey unmai)yen
    ave antha theermaanangalai notice aaga atchadithu varum jummavil viniyogikkumaaru kettukolgiren..ka
    ruthugal theermaanangal penagalai mattumindri aangalaiyum mulumaiyaga sendradaiyum..
  • Novian4U
    அஸ்ஸலாமு அலைக்கும்
    நல்ல விசயம். எடுத்துக்காட்டான விசயம்.
    தீர்மானங்கள் முழுமைபெற துஆ செய்கிறேன்
  • muja
    Assalamu Alaikum(varah)..Petrorgal Manaatin Theermanangalai notice aaga palliyil ottiyatharku nandri
    gal......MuJa
Write comment
Your Contact Details:
 
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security Please input the anti-spam code that you can read in the image.

!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved."