பொறாமைத் தீ
பில்கேட்ஸ் வீட்டு வாசலில் எத்தனை ferrari நின்றிருந்தாலும் அது நமக்குள் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாது. அது ஒரு இயற்கையான செய்தி.
ஆனா நம்ம பக்கத்து வீட்டுக்காரன் ஒரு பழைய ambassador கார் வாங்கிவிட்டால் போதும் -
நம்மால் அதை ஜீரணிக்க முடிவதில்லை.
நள்ளிரவுக்கும் தூக்கம் வருவதில்லை.
எப்படி வாங்கினான்? இவனுக்கு மட்டும் இப்படி பிரஸ்டீஜ் கூடுகிறது.
பெரிய ஆளாகி வருகிறானோ?
மனம் குமைய ஆரம்பிக்கிறது. தீ எரிகிறது. பொறாமைத் தீ..
அவனே வாங்கும்போது நம்மால் ஏன் வாங்க முடியவில்லை. நாமும் வாங்க முயற்சிப்போம் என்று நினைப்பது தான் நலல பிள்ளைக்கு அழகு.
ஆனால் நம் மனசு நம் சொல்வதை கேட்காது. நம்மை தூண்டி விடும்.. சுற்றி சுற்றி அடிக்கும். கனன்று கனன்று அல்சர் வரும் அளவுக்கு வயிறு பற்றி எரியும்..
"பெரிய இவனா அவன்? எப்படி வாங்கினானு தெரியாதா? எவன் எவனோ வீட்டுக்கு வந்திட்டு போனான். சந்தேகப்பட்டது சரியா போச்சு. "
அவதூறு பேச வைக்கும்.
"என்னை ஒரு பய இனி மதிக்க மாட்டானே. "
சுய கழிவிரக்கம் ஏற்படுத்தும்.
"என்னடி அவனையே பார்த்துட்டு இருக்கே. கார்ல போறவன் தான் உனக்கு புடிக்குமா? "
சந்தேகத்தை ஏற்படுத்தும்.
"எங்கயாவது மோதி சப்பயாவணும்"
கோபத்தை ஏற்படுத்தும்.
."எப்படியாவது இவனை மட்டம் தட்டனும்"
சந்தோசங்களை இழக்க வைக்கும்.
மனசு முழுக்க அனல் உள்ளவனால் ஒரு கவளம் சோறு கூட ஒழுங்காக உங்க முடியாது. தூக்கம் வராது. கவலை அனத்தும்.
அதற்கு தான் பொறாமையை பொறாமைத் தீ என்றே சொல்கிறார்கள்.
எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை; அவனுக்கு ரெண்டு கண்ணும் போக வேண்டும் என்பதே வயிற்றெரிச்சல் கோட்பாடு.
பெண்களுக்குத் தான் பொறாமை கொள்வதில் அதிக பங்கு இருக்கிறது.
எங்கேயோ மினுக்கிக்கிட்டு போறா வரா என்று இவர்களுடைய பொறாமை அவர்கள் கற்பை களங்கப்படுத்துவது வரை நீள்கிறது.
விவாகரத்துக்களையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சில சமயம் கொலை கூட.
பொறாமைத் தீயின் உச்ச கட்டம் மன நோய்.
ஒனிடா விளம்பரத்தில் வருமே
கொண்டுள்ளவருக்கோ பெருமை. அண்டை வீட்டாருக்கு பொறாமை என்று
அது தான் பொறாமை பிசாசு.
எனக்கு பிடித்த ஒரு பொன்மொழி:
நமது உறவினர்கள் நன்றாக இருக்கட்டும்.; நாம் அவர்களிடம்(உதவி கேட்டு) செல்லாமல் இருக்கட்டும்
இஃது இவ்வாறிருக்க. - இது போல வயிறெரிச்சல் கோஷ்டிகளுக்கு எண்ணெய் ஊற்றுவதற்கு என்றே சில கோஷ்டிகள் இருக்கின்றன. இவர்கள் பொறாமைத் தீயை யோகம் போல வளர்ப்பார்கள்.
என்கிட்டே அது இருக்கு இது இருக்கு என்று தம்பட்டம் அடித்து வயிறு ஏறிய வைப்பதில் ஜித்தர்கள் இவர்கள்.
இது மாதிரி தான் ஒரு ஊர் பெரிய மனுஷன் இருந்தாராம்.
அவருக்கு எப்பவும் பெருமை அடிக்கணும். புதுசு புதுசா சாமான்கள் வாங்கி வீட்டில் வைத்து எல்லாரையும் கூட்டி வந்து காண்பிப்பார். அவர்களும் வயிறு எரிந்து புழுங்கி விட்டு ரொம்ப சந்தோசமா இருக்கு என்று சொல்லிவிட்டு செல்வார்கள். அவர் வீட்டு பெயரே சிங்கபூரார் வீடு தான். இத்தனைக்கும் அவர் சிங்கப்பூர் போகவில்லை. அங்கே உள்ள பொருள்கள் அவர் வீட்டில் இருக்கும்.
ஒரு தடவை சிங்கப்பூரில் இருக்கும் அவர் மச்சினன் மச்சானின் பெருமையை மேம்படுத்தும் பொருட்டு தங்கத்தில் செயின் மோதிரம் இத்யாதிகளுடன் சிங்கப்பூர் சட்டை, பனியன், ஜட்டி கூடவே செருப்பு எல்லாம் வாங்கி அனுப்பினான்.
இவற்றை கிடைக்கபெற்ற சிங்கபூர்காரர் சும்மா இருப்பாரா? ஒரு தேநீர் பார்ட்டி ஏற்பாடு செய்தார்.
பார்டிக்கு முதல் நாள் இந்த பொருள்களை வருபவர்களிடம் எப்படி காட்டுவது என்று கண்ணாடி முன் நின்று ப்ராக்டிஸ் செய்தார். கையில் வேட்டியை பிடித்து தூக்கி நெஞ்சு வரை உயர்த்தி கொண்டு கையை ஆட்டி ஆட்டி |வாங்க வாங்க என்று வருபவர்களை வரவேற்பது போல ப்ராக்டிஸ் செய்தார்.
அதாவது அவருடைய புதிய செருப்பு உள்ளாடை பனியன் கை மோதிரம் வாட்ச் எல்லாம் மற்றவர் பார்க்க வேண்டும்.
அடுத்த நாள் பார்ட்டிக்கு எல்லாவற்றையும் எடுத்து அணிந்து கொண்டார். பழக்க தோஷத்தில் உள்ளாடை மட்டும் அணியத் தவறிவிட்டார்.
- Comments














Walaikumuassalam - “Taqabbal Allaahu minna wa minkum wa ahaalahu Allaah ‘alayka (May Allaah accept (
t...
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ் , வலைப்பூ அன்பர்கள்,நமதூர் சகோதரர்கள் ,மற்றும் இதை படிக்கும் அனைத்
த...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன.. - இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.... May Alla
h...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்