பரங்கிப்பட்டை: மாநிலம் முழுவதும் நேற்று +2 வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கியது. பரங்கிப்பேட்டையில் வழக்கமான உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் மாணவ மாணவிகள் தேர்வு மையமான சேவாமந்திர் பள்ளிக்கு பொதுத் தேர்வு எழுதச் சென்றனர். கடலூர் மாவட்டத்தில் கண்காணிப்புப் பணியில் 1500 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். மாணவ -மாணவிகளுக்கு MYPNO இணையம் தேர்வில் வெற்றிபெற இதன்மூலம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது. *கடலூர் மாவட்டத்தில் 14,679 மாணவர்களும், 14,849 மாணவிகளும் பிளஸ் 2 தேர்வு எழுதுகிறார்கள்.
*61 மையங்களில் தேர்வுகள் நடக்கின்றன. திங்கள்கிழமை தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. இதில் வினாக்கள் மிகவும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். மேலும்....
*பல பள்ளிகளில் பிரார்த்தனை நடத்தப்பட்டு மாணவ மாணவியருக்கு ஆசிரியர்கள் ஆசி வழங்கினர். கடைசி நேரத்திலும் தேர்வுக்கான அறிவுரைகளை வழங்கினர்.
*பிளஸ் 2 தேர்வில் கண்காணிப்புப் பணியில் 1500 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். முதன்மைக் கண்காணிப்பாளர், துறைத் தலைவர், கூடுதல் துறைத் தலைவர் என சுமார் 200 பேர் பணிபுரிந்தனர்.
*தலா 5 பேர் கொண்ட 10 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் பல பள்ளிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி தலைமையிலான பறக்கும் படையினரும் பல பள்ளிகளை சோதனையிட்டனர்.
*கடலூர் மாவட்டத்தில் பார்வையற்ற மாணவர்கள் உள்ளிட்ட ஊனமுற்றோர் 24 பேர் தேர்வு எழுதினர்.
- Comments















Walaikumuassalam - “Taqabbal Allaahu minna wa minkum wa ahaalahu Allaah ‘alayka (May Allaah accept (
t...
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ் , வலைப்பூ அன்பர்கள்,நமதூர் சகோதரர்கள் ,மற்றும் இதை படிக்கும் அனைத்
த...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன.. - இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.... May Alla
h...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்