
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் நடந்த அரசு விழாவில் மாவட்டத்தில் 175 கோடி ரூபாயில் புதிய 298 திட்டப் பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே. இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் மற்றும் புதிய வளர்ச்சி திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன், எம்.பி., திருமாவளவன் முன்னிலை வகித்தனர். கலெக்டர் சீத்தாராமன் வரவேற்றார்.
விழாவில் துணை முதல் வர் ஸ்டாலின் பங்கேற்று, நெடுஞ்சாலைத்துறை மூலம் கொள்ளிடம் ஆற் றின் குறுக்கே 84.85கோடி செலவில் முட்டம்- மணல் மேடு இடையே உயர் மட்ட பாலம் கட்ட அடிக் கல் நாட்டினார். நெடுஞ்சாலைத்துறை மூலம் 94.27 கோடி ரூபாய் செலவில் 4 பணிகள், பொதுப்பணித் துறை (கட்டடம் மற்றும் பராமரிப்பு) மூலம் 27.84 கோடி ரூபாயில் 33 பணிகள், தொழில் நுட்பக் கல்வித் துறை மூலம் 23.82 கோடியில் 2 பணிகள், பொதுப்பணித்துறை (நீர்வள மேம்பாடு) மூலம் 21.65 கோடியில் 24 பணிகள் என 174.98 கோடி செலவில் 298 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

ஊரக வளர்ச்சித்துறை மகளிர் திட்டம் மூலம் 3000 மகளிர் சுய உதவிக் குழுக் களை சேர்ந்த 45,000 பேருக்கு 28.80 கோடியும், சமூக நலத்துறை மூலம் 500 பேருக்கு ஒரு கோடியும், வருவாய்த்துறை மூலம் 5513 பயனாளிகளுக்கு 5.64 கோடி ரூபாய் என மொத் தம் 9,013 பயனாளிகளுக்கு 35.44 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில் எம்.பி., அழகிரி, எம்.எல்.ஏ., க்கள் அய்யப்பன், சபா ராஜேந்திரன், ரவிக்குமார், ராஜ்குமார், ராஜேந்திரன், முன் னாள் எம்.எல்.ஏ., சரவணன், ஒன்றிய குழு தலைவர்கள் ஜெயச்சந்திரன், செந்தில்குமார், மாமல் லன், முத்துப்பெருமாள், தனலட்சுமி, பேரூராட்சி தலைவர்கள் கணேசமூர்த்தி, ரவிச்சந்திரன், முகமது யூனூஸ், அஞ்சலைதேவி, துணைத்தலைவர்கள் செழியன், ராம்குமார், சிதம்பரம் நான்முனிசிபல் ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் நல்லதம்பி, ஒன்றிய கவுன்சிலர்கள் கலையரசன், முத்துபாஸ் கர், திருஞானசம்மந்தம், வினோபா, ஊராட்சித் தலைவர்கள் மோகன் தாஸ், வேணுகோபால், பொன்னுசாமி, அம்சவல்லி, பழனி, சக்கரபாணி, நாகப்பன், துணைத் தலைவர்கள் மதிக்குமார், கீதாராணி, பாலு, கிள்ளை பேரூராட்சி முன்னாள் துணை சேர்மன் ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி மணிவண்ணன்,கீழச்சாவடி அருள், ஒப்பந்ததாரர்கள் குணசேகரன்,ஜெய்சீலன், இளைஞரணி நீதிமணி, ராம்பிரகாஷ் உள்ளிட் டோர் பங்கேற்றனர். நெடுஞ்சாலைத்துறை அரசு செயலர் சந்தானம் நன்றி கூறினார்.
- Comments













Walaikumuassalam - “Taqabbal Allaahu minna wa minkum wa ahaalahu Allaah ‘alayka (May Allaah accept (
t...
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ் , வலைப்பூ அன்பர்கள்,நமதூர் சகோதரர்கள் ,மற்றும் இதை படிக்கும் அனைத்
த...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன.. - இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.... May Alla
h...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்