கடற்கரை நகரங்களையும், கிராம சாலைகளையும் இணைக்கும் விதமாகவும், முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் நெரிசலை குறைக்கும் விதமாகவும் இ.சி.ஆர். என்ற கிழக்கு கடற்கரை சாலை 1998ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
சென்னையில் இருந்து புதுச்சேரி செல்வதற்கு பிரதான சாலையாக இந்த ஈ.சி.ஆர். பயன்படுகிறது. சுற்றுலா தலங்களான முட்டுக்காடு ஏரி, மாமல்லபுரம் மற்றும் பீச்சுகள் நிறைந்து காணப்படும் பகுதிகள் வழியாக இந்த சாலை செல்வதால் வார இறுதி நாட்களை கழிக்க செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு, சென்னைவாசிகளுக்கும் இந்த சாலை பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
ரியல் எஸ்டேட் துறையிலும் அபரிமிதமான வளர்ச்சியை ஈ.சி.ஆர். ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஆறுவழிச் சாலையாக மாற்றும் பணிக்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கு அரசிடம் அனுமதி பெற்றுள்ளது நெடுஞ்சாலைத்துறை.
நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த சாலையில், விபத்துக்களுக்கு பஞ்சமே இல்லை. 54 கிராமங்களின் வழியாக செல்லும் இந்த சாலையில், விரைவாக செல்கிறேன் என்று அதிக வேகத்தில் செல்லும் வாகனங்கள் கிராம மக்களை கண்டு கொள்வதே இல்லை. இதனால் ஏற்படும் உயிர் பலிகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதில் கிழக்கு கடற்கரை சாலையின் இதயமாக குறிப்பிடப்படும் கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் ஊத்தங்குடி ஆகிய 5 கிராம பஞ்சாயத்துகளும், சோழிங்நல்லூர் டவுன் பஞ்சாயத்துக்களும் அடங்கிய பகுதிகளே விபத்துகளுக்கு பெயர் பெற்ற பகுதியாக உள்ளது.
விபத்துக்களை தடுக்கும் விதமாகவும், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும் ஸ்பீட் பிரேக்கர்களோ, தடுப்புகளோ இல்லாமல் இருப்பது, வாகன ஓட்டிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் தினம் ஒரு விபத்து என்றும், ஆண்டுக்கு 10 முதல் 15 உயிர்பலி விபத்துக்களும், அக்கரை முதல் கீழ்புதுபத்து பகுதிகளில் அரங்கேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ. போட்டி போடும் இடம் சாலை அல்ல என வாகனங்கள் அறிந்து, சாலையில் வேகத்தை குறைந்து கவனமுடன் சென்றால், விபத்துகளை குறைப்பதுடன், உயிர்பலியையும் தடுக்க முடியும். அதிக வேகம் ஆபத்து என்பதை வாகன ஓட்டிகள் உணரவேண்டும். மிதவேகம் மிகநன்று.
Source: Dinamalar
- Comments














குறுகிய நோக்கில் சிறுத்து விடாமல், அனைத்துத் தரப்பாரும், வாசிக்கவும் கற்கவும் வழி செய்கிற அறிவு நிலை
ய...
என் கனவு முஸ்லிம் குழந்தைகள் அனைவரும் அரபி மொழி கற்க வேண்டும் , அவர்களுக்கு அதனை வலியுறுத்தி மொழியை
...
YES.. IF IT IS A PUBLIC LIBRARY, WE SHOULD OPEN FOR BOTH GENDERS AND NOT ONLY FOR MUSLIMS. ALL THE
P...
How about the INDEMNITY of these Teachers... who will bear them...government or whom... MAGDOUM
Congratulations! - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் வாழ்த்துக்கள் சகோதரர்களே!!! சிற்ப்பாக செயல்பட அல்லாஹ்
வ...