Monday, Sep 06th

Last update:07:11:54 PM GMT

You are here:

பரங்கிப்பேட்டை அருகே விபத்து: மினி டெம்போ கவிழ்ந்து 26 பேர் படுகாயம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பரங்கிப்பேட்டை, ஜுலை.29-

பரங்கிப்பேட்டை அருகே மினி டெம்போ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் தனியார் டாக்டர்கள் விரைந்து வந்து மருத்துவ உதவி செய்தனர்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுக்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் பெரியக்குப்பத்தில் நடந்த ஒரு சாவு நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் அந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு மீண்டும் புதுக்குப்பத்திற்கு புறப்பட்டனர். ஆனால் அவர்கள் செல்வதற்கு பஸ் வசதி இல்லை.

இதனால் மினி டெம்போவை வாடகைக்கு பேசி ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த மினி டெம்போவில் 30-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். மினி டெம்போவை அன்னப்பன் பேட்டையை சேர்ந்த முனியன் மகன் வினோத் (வயது 19) என்பவர் ஓட்டி வந்தார். டெம்போ புதுக்குப்பம் கிராமம் அருகில் உள்ள வளைவில் திரும்பிய போது திடீரென ரோட்டோரம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் டெம்போவில் பயணம் செய்த மாலாவதி, சுந்தரம், லைலா, சித்ரா, தங்கபாப்பா, அல்லி, மாணிக்கம், பானுமதி, மீரா, தனலட்சுமி, யசோதை, முத்துலட்சுமி, விஜயா, சாந்தா, செல்வி, அஞ்சலை, பச்சவள்ளி உள்பட 26 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு டாக்டர்கள் யாரும் இல்லை. இதனால் அங்குள்ள தனியார் டாக்டர்கள் அரசு மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து காயமடைந்த அனைவருக்கும் சிகிச்சை அளித்தனர்.

ஆனால் மருத்துவமனையில் போதிய இடவசதியின்மையால் மருத்துவமனை வெளியில் வைத்து காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் மின் விளக்கு வசதியில்லாததால் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மிகவும் சிரமப்பட்டனர். அதையடுத்து ஒரு சிலர் சிதம்பரம், கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் இந்த விபத்து சம்பவம் அறிந்ததும் புதுக்குப்பம் கிராம மக்கள் ஒன்று திரண்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு கூடினர். இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. மினி டெம்போவில் பயணிகளை ஏற்றக்கூடாது என்று பல முறை வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை செய்தும் இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனை தடுக்க மினிடெம்போவில் பயணிகளை ஏற்றும் டிரைவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் ஆதங்கத்தோடு கூறினர்.

Source: Daily Thanthi

படம் உதவி: www.tntj-pno.tk

Write comment
Your Contact Details:
 
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security Please input the anti-spam code that you can read in the image.

!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved."