ஈரோடு, ஜுலை.29-
வினாத்தாள் `அவுட்' ஆனதால் தமிழகம் முழுவதும் ஐ.டி.ஐ. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. வினாத்தாள் வெளியானது பற்றி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
தொழில் கல்வி படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு கடந்த 23-ந் தேதி தமிழகம் முழுவதும் தொடங்கியது. தேர்வு அட்டவணைப்படி நேற்று பிட்டர் பாடப்பிரிவுக்கு கருத்தியல் தேர்வு நடக்க வேண்டும்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் அந்திïரில் இருந்து இந்த தேர்வுக்கான கேள்வித்தாள் அவுட் செய்யப்பட்டதாகவும் மாணவர்களுக்கு வினாத்தாள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த சம்பவம் நேற்று ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற வேண்டிய 2-ம் ஆண்டு பிட்டர் கருத்தியல் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. நேற்று தேர்வு எழுத வந்த மாணவர்கள் தேர்வு மையத்தில் ஒட்டப்பட்ட அறிவிப்பை பார்த்ததும் அதிர்ச்சியில் வீடுகளுக்கு திரும்பிச்சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்து உள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
அந்திïர் குருநாதசாமி கோவில் அருகே உள்ள சத்தி ஐ.டி.ஐ. தொழிற் பள்ளியில் படிக்கும் மாணவன் வரதராஜன் மூலம் வினாத்தாள் வெளியானதாக தெரிய வந்துள்ளது. வரதராஜன் உள்பட 3 பேருக்கு பிட்டர் கருத்தியல் வினாத்தாள் மயிலாடுதுறையில் இருந்து ஒருவர் பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்து உள்ளார். இந்த வினாத்தாளை பெற்ற மாணவர்கள் அதை ஜெராக்ஸ் எடுத்து, ஈரோடு மாவட்டத்தில் ஐ.டி.ஐ. படிக்கும் மாணவர்களுக்கு வினியோகித்துள்ளனர்.
இந்த வினாத்தாளை பிட்டர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்து உள்ளார்கள். இந்த வினாத்தாள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்களின் கைகளில் கிடைத்து உள்ளது. இந்த வினாத்தாளை வினியோகம் செய்தவர் யார் என்பது இன்னும் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே உள்ளது.
இந்த கேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருந்தது. மேலும் வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கு விடைகளும் டிக் செய்யப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளார்கள்.
இதைத்தொடர்ந்து இந்த மோசடியை கண்டுபிடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து கோபி ஆர்.டி.ஓ. மணிமேகலை, நேற்று அந்திïரில் உள்ள சக்தி ஐ.டி.ஐ. முதல்வர் அப்துல் ரசூல் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.
வினாத்தாளை அவுட் செய்ததாக சந்தேகப்படும் மாணவன் வரதராஜ், மோட்டார் மெக்கானிக் படிக்கும் மாணவர் விஸ்வநாதன், ஒயர்மேன் பிரிவில் படிக்கும் மாணவர் உதயகுமார், எலக்ட்ரீசியன் பிரிவில் படிக்கும் மாணவர்கள் தவசி, குணசேகரன் ஆகியோரிடம் ஆர்.டி.ஓ. மணிமேகலை ரகசிய விசாரணை நடத்தினார்.
மேலும், கேள்வித்தாள் அவுட் ஆன விவகாரத்தில் சக்தி ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு தொடர்பு உள்ளதா? இந்த கேள்வித்தாள்கள் எங்கிருந்து மாணவர்களுக்கு கொண்டுவரப்பட்டது. ஐ.டி.ஐ. ஆசிரியர்கள் மூலம் இந்த கேள்வித்தாள்கள் வாங்கப்பட்டதா? இதில் ஆசிரியர்களுக்கு தொடர்பு உள்ளதா? எத்தனை ஆண்டுகளாக கேள்வித்தாள்களை வெளியிடும் சம்பவங்கள் நடந்து வருகின்றன? என்ற பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார்? மயிலாடுதுறையில் இருந்து பேக்ஸ் செய்தது யார்? அந்திïரில் யாருக்கு பேக்ஸ் செய்து அதை மாணவர்களுக்கு வினியோகித்தது என்பதையும் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
இதற்கிடையே ஐ.டி.ஐ. தேர்வு வினாத்தாள் வெளியானது குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்படும் ஐ.டி.ஐ.களுக்கான அகில இந்திய தொழில் தேர்வுகள் கடந்த 23-ந்தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது.
தமிழ்நாட்டில் 125 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்ததேர்வை வேலைவாய்ப்பு பயிற்சி துறை அதிகாரிகள், வருவாய்த்துறை சப்-கலெக்டர்கள் ஆகியோர் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு தேர்வு பாதுகாப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பிட்டர் தொழிற்பிரிவிற்கான தேர்வு வினாத்தாள் வெளியானதாக செய்தி வெளியிடப்பட்டது. இது அரசின் கவனத்திற்கு வந்தநிலையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் எடுத்த நடவடிக்கையின் படி வினாத்தாள் தமிழகத்தில் வெளியானதா? அல்லது வினாத்தாள் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளதால் வேறு மாநிலங்களில் இருந்து வரப்பெற்றதா? என்பதற்கான விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று நடைபெறுவதாக இருந்த 2 வருட அனைத்து தொழிற்பிரிவிற்கான கருத்தியல் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
விரிவான விசாரணைக்குப்பின் இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்துசெய்யப்பட்ட கருத்தியல் தேர்வு நடைபெறும் தேதி தேர்வு வினாத்தாள் தயார் செய்து தேர்வு நடத்தும் டெல்லியில் உள்ள மத்திய வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை தலைமை ஆணையரிடம் இருந்து அனுமதி பெறப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source: Daily Thanthi
- Comments












குறுகிய நோக்கில் சிறுத்து விடாமல், அனைத்துத் தரப்பாரும், வாசிக்கவும் கற்கவும் வழி செய்கிற அறிவு நிலை
ய...
என் கனவு முஸ்லிம் குழந்தைகள் அனைவரும் அரபி மொழி கற்க வேண்டும் , அவர்களுக்கு அதனை வலியுறுத்தி மொழியை
...
YES.. IF IT IS A PUBLIC LIBRARY, WE SHOULD OPEN FOR BOTH GENDERS AND NOT ONLY FOR MUSLIMS. ALL THE
P...
How about the INDEMNITY of these Teachers... who will bear them...government or whom... MAGDOUM
Congratulations! - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் வாழ்த்துக்கள் சகோதரர்களே!!! சிற்ப்பாக செயல்பட அல்லாஹ்
வ...