Monday, Sep 06th

Last update:07:11:54 PM GMT

You are here:

தமிழகத்தில் கள்ள நோட்டுகளை ஒழிப்பது எப்படி? சென்னையில் உயர் போலீஸ் அதிகாரிகள் அவசர ஆலோசனை

மின்னஞ்சல் அச்சிடுக PDF

சென்னை, ஜுலை.29-

தமிழகத்தில் கள்ள நோட்டுகளை ஒழிப்பது குறித்தும், அது தொடர்பான குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்தும் சென்னையில் உயர் போலீஸ் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினார்கள்.

தமிழகத்தில் கள்ள நோட்டுகளை ஒழிப்பது தொடர்பாக டி.ஜி.பி. லத்திகா சரண், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம் ஆகியோர் தலைமையில் சென்னையில் உயர் போலீஸ் அதிகாரிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

சென்னை சாந்தோமில் உள்ள மாநில குற்ற ஆவண காப்பக தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மஞ்சுநாதா, சென்னை போலீஸ் கமிஷனர் பொறுப்பு வகிக்கும் கூடுதல் போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட், மதுரை போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன், கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு, மேற்கு மண்டல ஐ.ஜி. சிவனாண்டி, வடக்கு மண்டல ஐ.ஜி. ஆர்.சி.குடவாலா மற்றும் ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் டி.ஜி.பி. லத்திகா சரண், கூடுதல் டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம் ஆகியோர் பேசும்போது, கள்ள நோட்டுகளை ஒழிப்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தினார்கள்.

கள்ள நோட்டுகள் டாஸ்மாக் மதுக்கடைகளில்தான் அதிக அளவில் புழக்கத்தில் விடப்படுகிறது. இந்த கள்ள நோட்டுகளை கண்டுபிடிப்பதற்காக டாஸ்மாக் ஊழியர்களுக்கு விசேஷ பயிற்சி கொடுக்க வேண்டும் என்றும், அதுபோல் பொதுமக்கள் மத்தியில் கள்ள நோட்டுகளை கண்டுபிடிப்பது எப்படி? என்பது குறித்து விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மற்ற மாநிலங்களில் கள்ள நோட்டுகள் வழக்குகள் எவ்வாறு கையாளப்படுகிறது என்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் கள்ள நோட்டுகள் புழங்குவதை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் கண்டிப்பாக பொருத்துவதன் அவசியம் குறித்தும் கூட்டத்தில் விவாதம் நடத்தப்பட்டது.

Source: Daily Thanthi

Write comment
Your Contact Details:
 
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security Please input the anti-spam code that you can read in the image.

!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved."