Monday, Sep 06th

Last update:07:11:54 PM GMT

You are here:

கடலூரில் பிளாட்பாரம் மீது ரயில் பெட்டிகள் உரசல் - பயணிகள் உயிர் தப்பினர்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

கடலூர், ஜூலை 29: 

விழுப்புரம் & மயிலாடுதுறை மார்க்கத்தில் அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு தற்போது பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன. ரயில் போக்குவரத்து தொடங்கி விட்ட நிலையிலும், சில ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகள் இன்னும் முழுமைபெறவில்லை.

கடலூர் திருப்பாதிரிப் புலியூர் ரயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் அமைந்துள்ள ரயில் பாதையில் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, தற்போது ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் 2வது பிளாட்பாரத்தில் சோதனை நடத்தப்படாமலும், ரயில் இயக்கப்படாமலும் இருந்தது.

ரயில்பாதையின் தன்மை குறித்து முழுமை யான சோதனை நடத்தப்படாத நிலையில், நேற்று அந்த பாதையில் ரயில்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. ரயில்வே துறையின் இயக்கம் மற்றும் பராமரிப்புத்துறை மற்றும் ரயில்வே விகாஸ் நிறுவனமும் 2வது பிளாட்பாரம் வழியாக ரயில்களை இயக்க ஒப்புதல் அளித்ததாக தெரிகிறது.

நேற்று அதிகாலை 5.30 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு பாசஞ்சர் ரயில் 9 பெட்டிகளுடன் சென்றது. பள்ளி கல்லூரி மாணவர்கள், அரசு உழியர்கள், வியாபாரிகள் என 300 பேர் பயணம் செய்தனர். காலை 6.40 மணிக்கு திருப்பாதிரிப் புலியூர் ரயில் நிலையம் 2வது பிளாட்பாரம் வழியாக ரயில் தன் வேகத்தை குறைத்து மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நுழைந் தது.

அப்போது பிளாட்பாரத்தின் பக்க சுவர்களின் மீது ரயில்பெட்டிகள் உரசி தீப்பொறி கிளம்பியது. இதனால் ரயில் பெட்டிகள் தடுமாறின. பயணிகள் அதிர்ச்சியில் அலறினர். இந்த மோதலில் இன்ஜினை அடுத்துள்ள 3 பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன. மற்ற அனைத்து பெட்டிகளும் லேசான சேதம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் வந்து பிளாட்பார பகுதியை பார்வையிட்டனர். ரயில்பெட்டிகள் மோதிய பகுதிகளில் ரயில் பாதையை ஓட்டிய பிளாட்பாரத்தின் ஓரப்பகுதிகளை உடைத்து அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டனர்.

அதன்பேரில் பிளாட்பாரத்தின் குறிப்பிட்ட பகுதிகள் உடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ரயில் வேகமாக வந்திருந்தால், மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என அண்ணாமலை பல்கலை கழக மாணவர் ஒருவர் தெரிவித்தார். சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, குறைகளை சரி செய்த பின் 2வது ரயில் பாதை வழியாக ரயில்கள் இயக்கப்படவேண்டும் என ரயில் பயணிகள் நல சங்க நிர்வாகி முத்துக்குமரன் தெரிவித்தார்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலைய 2வது பிளாட்பாரம் வழியாக நேற்று காலை சென்ற மயிலாடுதுறை பாசஞ்சர் ரயிலின் பெட்டிகள் பிளாட்பாரத்தின் பக்கவாட்டில் உரசி சேதம் அடைந்தன. ரயில் பாதையை ஒட்டிய பிளாட்பாரத்தின் ஓரப் பகுதிகளை உடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடைக்கும் பகுதியில் கோடு வரையப்பட்டுள்ளது.

Source: Dinakaran

Write comment
Your Contact Details:
 
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security Please input the anti-spam code that you can read in the image.

!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved."