சென்னை, ஜூலை 29:
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணி நடக்கிறது. இதற்காக சாலை நடுவில் தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. முக்கிய சாலைகளில் அதிக வாகனங்கள் பயன்படுத்துவதால், பணி மெதுவாக நடக்கிறது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேடு, வடபழனி, கே.கே.நகர், அசோக் நகர், கத்திபாரா, ஆலந்தூர் ஆசர்கானா, மீனம்பாக்கம், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்லும் பஸ்கள், கனரக வாகனங்கள் சென்னை மாநகரத்துக்குள் வர 31ம் தேதி முதல் தினமும் காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை தடை விதிக்கப்படுகிறது.
கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல்&பெருங்களத்தூர் பைபாஸ் சாலை வழியாக ஜி.எஸ்.டி சாலையை அடைந்து வெளியூர் செல்லலாம். இதற்காக பீர்க்கன்காரணை மற்றும் பெருங்களத்தூரில் வெளியூர் பஸ்கள் நிற்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. அதே போல வெளியூர் பயணிகள் சென்னை வரும் போது வண்டலூரில் இறங்க வேண்டும். பின்னர் மாநகர பேருந்து பிடித்து தங்கள் பகுதிக்கு செல்லலாம். வரும் 31ம் தேதி முதல் இது நடை முறைக்கு வருகிறது.
Source: Dinakaran
- Comments













குறுகிய நோக்கில் சிறுத்து விடாமல், அனைத்துத் தரப்பாரும், வாசிக்கவும் கற்கவும் வழி செய்கிற அறிவு நிலை
ய...
என் கனவு முஸ்லிம் குழந்தைகள் அனைவரும் அரபி மொழி கற்க வேண்டும் , அவர்களுக்கு அதனை வலியுறுத்தி மொழியை
...
YES.. IF IT IS A PUBLIC LIBRARY, WE SHOULD OPEN FOR BOTH GENDERS AND NOT ONLY FOR MUSLIMS. ALL THE
P...
How about the INDEMNITY of these Teachers... who will bear them...government or whom... MAGDOUM
Congratulations! - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் வாழ்த்துக்கள் சகோதரர்களே!!! சிற்ப்பாக செயல்பட அல்லாஹ்
வ...