பெங்களூர், ஜூலை 28: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்குநிரந்தர உறுப்பினர் பதவி வழங்க பிரிட்டன் முழு ஆதரவு அளிக்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பெங்களூருக்கு வந்துள்ள கேமரூன், எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் உள்ள இன்ஃபோசிஸ் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் செயல்பாடுகளை புதன்கிழமை ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு நிருபர்களுக்கு கேமரூன் அளித்த பேட்டி: இந்தியா வளரும் சக்தி வாய்ந்த நாடு மட்டும் இல்லை. உலக சக்தியாகவும் உருவெடுத்து வருகிறது.
பல்வேறு வகைகளில் முன்னணியில் இருக்கும் இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்கும் நேரம் வந்துவிட்டது. இந்த உறுப்பினர் பதவி வழங்க இந்தியாவுக்கு பிரிட்டன் முழு ஆதரவு வழங்கும். பிரிட்டனின் நிலையும் அதேதான். இந்தியா அல்லது எந்த நாடுக்கும் எதிராக எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவித்தால் அதை அனுமதிக்க மாட்டோம் என்று கேமரூன்.
ரூ.9500 கோடியில் 57 பயிற்சி விமானங்கள்: பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் சிஸ்டம் நிறுவனத்திடம் இருந்து ரூ.9500 கோடி செலவில் 57 நவீன ஹாக் பயிற்சி ஜெட் விமானங்களை வாங்க பிரதமர் கேமரூன் முன்னிலையில் இந்தியா புதன்கிழமை ஒப்பந்தம் செய்து கொண்டது.
Source: Dinamani
- Comments













குறுகிய நோக்கில் சிறுத்து விடாமல், அனைத்துத் தரப்பாரும், வாசிக்கவும் கற்கவும் வழி செய்கிற அறிவு நிலை
ய...
என் கனவு முஸ்லிம் குழந்தைகள் அனைவரும் அரபி மொழி கற்க வேண்டும் , அவர்களுக்கு அதனை வலியுறுத்தி மொழியை
...
YES.. IF IT IS A PUBLIC LIBRARY, WE SHOULD OPEN FOR BOTH GENDERS AND NOT ONLY FOR MUSLIMS. ALL THE
P...
How about the INDEMNITY of these Teachers... who will bear them...government or whom... MAGDOUM
Congratulations! - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் வாழ்த்துக்கள் சகோதரர்களே!!! சிற்ப்பாக செயல்பட அல்லாஹ்
வ...