ஆமதாபாத், ஜூலை29-
மும்பை- டெல்லி நகரங்களுக்கு இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவை நடந்து வருகிறது. நேற்று பிற்பகல் மும்பையில் இருந்து டெல்லிக்கு ஒரு இண்டிகோ விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 114 பயணிகள் இருந்தனர்.
விமானம் புறப்பட்ட சுமார் 30 நிமிடங்களில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது முன்பக்க காற்று தடுப்பு கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக தொழில் நுட்ப கோளாறு ஏற்படத் தொடங்கியது.
எதிர்பாராத இந்த பிரச்சினையால் விமானிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து விமானத்தை அவசரமாக தரை இறக்க விமானிகள் முடிவு செய்தனர்.
நடுவானில் அந்த விமானம் தத்தளித்தபோது, குஜராத் வான்வெளி எல்லையில் இருந்தது. இதனால் விமானத்தை ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய்படேல் விமான நிலையத்தில் தரை இறக்க தீர்மானிக்கப்பட்டது.
மிக மெதுவாக அந்த விமானம் பறக்க விடப்பட்டது. மாலை 4.40 மணிக்கு அந்த விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. இதனால் 114 பயணிகளும் நூலிழையில் உயிர் தப்பினார்கள்.
Source: Maalai Malar
- Comments













குறுகிய நோக்கில் சிறுத்து விடாமல், அனைத்துத் தரப்பாரும், வாசிக்கவும் கற்கவும் வழி செய்கிற அறிவு நிலை
ய...
என் கனவு முஸ்லிம் குழந்தைகள் அனைவரும் அரபி மொழி கற்க வேண்டும் , அவர்களுக்கு அதனை வலியுறுத்தி மொழியை
...
YES.. IF IT IS A PUBLIC LIBRARY, WE SHOULD OPEN FOR BOTH GENDERS AND NOT ONLY FOR MUSLIMS. ALL THE
P...
How about the INDEMNITY of these Teachers... who will bear them...government or whom... MAGDOUM
Congratulations! - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் வாழ்த்துக்கள் சகோதரர்களே!!! சிற்ப்பாக செயல்பட அல்லாஹ்
வ...