லக்னோ, ஜூலை. 29-
உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து டெல்லிக்கு தனியார் பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை புறப்பட்டது. விமானத்தில் 144 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் இருந்தனர். விமானம் மேலே கிளம்புவதற்காக ஓடு பாதையில் வேகமாக சென்றது. அப்போது பறவை ஒன்று விமானத்தில் மோதியது. இதனால் விமானத்தில் சேதம் ஏற்பட்டது.
உடனே பைலட் மேலே கிளப்புவதை நிறுத்தி விட்டு விமான நிறுத்துமிடத்துக்கு திருப்பி கொண்டு வந்தார். பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர். பின்னர் என்ஜினீயர்கள் பறவை மோதிய இடத்தை சோதனையிட்டனர்.
பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விமானம் நடுவானில் பறக்கும் போது பறவை மோதி இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். ஆனால் தரையில் ஓடும் போது மோதியதால் பெரிய பாதிப்பு இல்லை. பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள்.
Source: Maalai Malar
- Comments













குறுகிய நோக்கில் சிறுத்து விடாமல், அனைத்துத் தரப்பாரும், வாசிக்கவும் கற்கவும் வழி செய்கிற அறிவு நிலை
ய...
என் கனவு முஸ்லிம் குழந்தைகள் அனைவரும் அரபி மொழி கற்க வேண்டும் , அவர்களுக்கு அதனை வலியுறுத்தி மொழியை
...
YES.. IF IT IS A PUBLIC LIBRARY, WE SHOULD OPEN FOR BOTH GENDERS AND NOT ONLY FOR MUSLIMS. ALL THE
P...
How about the INDEMNITY of these Teachers... who will bear them...government or whom... MAGDOUM
Congratulations! - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் வாழ்த்துக்கள் சகோதரர்களே!!! சிற்ப்பாக செயல்பட அல்லாஹ்
வ...