Friday, May 24th

Last update:10:01:21 PM GMT

You are here:

இணையதளத்தில் ஒலிம்பிக் போட்டி

மின்னஞ்சல் அச்சிடுக PDF
2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியை இணையதளத்தின் மூலம் இந்திய ரசிகர்கள் காணலாம் என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி) அறிவித்துள்ளது.
 
இதேபோல் ஆசிய, ஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்தவர்களும் இணையதளத்தின் மூலம் கண்டுகளிக்கலாம். ஒலிம்பிக் போட்டியை மட்டுமின்றி அதன் சிறப்புக் கூறுகளையும் (ஹைலைட்ஸ்) இணையதளத்தின் மூலம் கட்டணமின்றி பார்க்கமுடியும். இதற்காக ஐஓசி 'யூடியூப் சேனல்' ஒன்றையும் தொடங்கியுள்ளது.
 
இதில் ஒலிம்பிக் குறித்த தகவல்கள், போட்டி முடிவுகள், கடந்த ஒலிம்பிக் போட்டிகள் குறித்த செய்திகள் 24 மணி நேரமும் வெளியாகிக் கொண்டிருக்கும் என்று ஐஓசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஒலிம்பிக் போட்டி ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை பகிர...

Add comment