mypno.com

Tuesday, Jun 18th

Last update:12:39:34 PM GMT

You are here:

ஏலத்துக்கு வருகிறது முதல் ஆப்பிள் கம்ப்யூட்டர்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய முதல் ஆப்பிள் கம்ப்யூட்டர் ஏலத்துக்கு வருகிறது. பிரபல ஏல நிறுவனமான ஸதபிஸ் இதனை ஏலத்துக்கு கொண்டு வந்துள்ளது.
 
உலகின் ஆரம்ப கால பர்சனல் கம்ப்யூட்டர்களை (பி.சி.) அதிக எண்ணிக்கையில் உருவாக்கி விற்பனைக்கு கொண்டு வந்த நிறுவனம் ஆப்பிள். இன்றைய மிகப் பிரபலமான ஐ-பாட், ஐ-பேட் வகையறாக்களை உருவாக்கிய நிறுவனத்தின் முதல் நூதன தொழில்நுட்ப படைப்பு இந்தக் கம்ப்யூட்டர்தான்.
 
ஆப்பிள் நிறுவனத்தை தோற்றுவித்தவர்களான ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வாஸ்னியாக் இதனைத் தங்கள் கைகளாலேயே உருவாக்கினார்கள். 1976-ம் ஆண்டு ஜூலையில் விற்பனைக்கு வந்தபோது இதன் விலை 666.66 டாலர்கள். அன்றைய ரூபாய் மதிப்பில் ஏறத்தாழ ரூ. 6 ஆயிரம். ஜூன் 15-ம் தேதி நியூயார்க்கில் நடக்கவுள்ள ஏலத்தில் முதல் ஆப்பிள் பி.ஸி. ஒரு கோடி ரூபாய் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை பகிர...

Add comment