
சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கையின் பேரில் சிதம்பரம் தலைமை தபால் நிலையத்தில் ரயில் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த் சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கடந்த ஜூன் 15-ம் தேதி சென்னை அஞ்சல் துறைத் தலைவருக்கு கடிதம் எழுதினார். இது குறித்த செய்தி நமது MYPNO இணையதளத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 19.06.2012 அன்று வெளியிடப்பட்டது
அக்கடிதத்தில் இந்திய அஞ்சல்துறை அறிவிப்பின்படி சிதம்பரம் தலைமை தபால் நிலையத்தில் ரயில் மற்றும் விமான முன்பதிவு மையம் திறக்கப்படவில்லை. உடனடியாக திறக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அவருடைய கோரிக்கையை ஏற்ற அஞ்சல் துறைத் தலைவர் உடனே சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் ரயில், விமானம் மற்றும் பஸ் முன்பதிவு மையம் திறக்க அஞ்சல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் புதன்கிழமை சிதம்பரம் தலைமை தபால் நிலையத்தில் ரயில், விமானம் மற்றும் பஸ் முன்பதிவு சேவை மையம் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவில், சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், முன்பதிவு மையத்தை தொடங்கி வைத்து முன்பதிவு செய்து முதல் டிக்கெட்டை பெற்று கொண்டார்.
நிகழ்ச்சியில், சிதம்பரம் தலைமைத் தபால் நிலைய அதிகாரி ராமலிங்கம், உதவி தபால் அதிகாரி செல்வராஜ், தபால் துறை அதிகாரி ரவி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலர் ஆர்.ராமச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் வெங்கடேசன், கலிபா ஆகியோர் கலந்து கொண்டனர்.


