mypno.com

Thursday, Jun 20th

Last update:12:15:18 PM GMT

You are here:

பரங்கிப்பேட்டையில் 66-வது சுதந்திரதின விழா!

மின்னஞ்சல் அச்சிடுக PDF

 

 

பரங்கிப்பேட்டை: நாட்டின் 66-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு பரங்கிப்பேட்டையில் பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திரதினம் கொண்டாடப்பட்டது. பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்  செயல் அலுவலர் கலைபாண்டி தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் முஹமது யுனூஸ் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றினார். இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
பரங்கிப்பேட்டை மீராப்பள்ளி தெருவில் கிரசண்ட் நலவாழ்வு சங்கம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் டாக்டர் எஸ்.நூர் முஹமது தலைமையேற்று தேசியகொடியேற்றினார்.

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் அசோகன் தேசிய கொடியேற்றிவைத்தார். பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளர் கலிமுல்லா ஷா தலைமயில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.

அரசினர் ஆண்கள் பள்ளி மற்றும் மகளிர் மேல் நிலைப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் அணிவகுப்புடன் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. கலிமா மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் மாணவ-மாணவிகளின் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் சுதந்திரதினம்கொண்டாடப்பட்டது.

மூனா ஆஸ்திரேலியன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் முஹமது யுனூஸ் தேசியகொடியேற்றினார். பரங்கிப்பேட்டை மனிதநேய இலவச கல்வி மையத்தில் நடந்த சுதந்திரதின விழாவில் நிர்வாக இயக்குநர் கா.மு. கவுஸ் கொடியேற்றி வைத்தார்.

இதை பகிர...

Add comment