
பரங்கிப்பேட்டை: ஹிஜ்ரி 1433 (2012) ஆண்டின் ரமலான் மாதம் நேற்ற நிறைவடைந்ததையொட்டி, இன்று பரங்கிப்பேட்டையில் சந்தோஷம், உற்சாகம், மகிழ்ச்சி, குதூகலத்துடன் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையொட்டி, இன்று காலை 8.30 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் பெருநாள் தொழுகை மவ்லவி கபீர் அஹமது மதனி தலைமையில் நடைபெற்றது.

மஹ்மூதியா ஷாதி மஹாலிலும் ஹாஜி B.M.ஹபீபுல்லாஹ் மரைக்காயர் நினைவு மினி மஹாலிலும் பெண்களுக்காக தனி இடம் வசதி செய்யப்பட்டிருந்தது. பெண்கள் கூட்டம் மிக அதிகளவில் இருந்ததால் மஹ்மூதியா ஷாதி மஹால் உள் நுழைவாயில் முன்பாகவும் பெண்கள் தொழுகை நடத்தினார்கள்.

அதிகமான வருகைகளினால் ஆண்கள் சாலையிலும் தமது தொழுகைகளை நிறைவேற்றினர்.

குடும்ப அங்கத்தினர்கள் பலரும் பணி / தொழில் நிமித்தம் வெளிநாடுகளில் இருப்பதின் காரணமாக இந்த சந்தோஷ தருணத்தில் அவரவர் குடும்பத்துடன் இல்லை என்ற வருத்தம் மேலிட்ட போதிலும் இவை யாவும் மனித வாழ்வில் தவிர்க்க இயலாதவை என்ற நிதர்சனமும் உணரப்பட்டிருந்தது.





இனிய மகிழ்வலைகளையும், இதய நெகிழ்வலைகளையும் ஏற்படுத்திய இந்த நாள் இதமான நாளாக, பொன்னாளாக பரங்கிப்பேட்டை மக்களுக்கு அமைந்திருந்தது. உலகெங்கும் பரவி இருக்கும் பரங்கிப்பேட்டை உறவுகளுக்கு ஊரின் முன்னோடியாகவும், உறவுகளின் உயிர் நாடியாகவும் இருக்கும் உங்கள் www.mypno.com தனது ஈகைத்திருநாள் வாழ்த்தினை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்வு அடைகிறது .



Comments
THANKS TO mypno.com
அனைவர்களுக்கும் மீ.மெ குடும்பத்தாரின் ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்...
என்றும் அன்புடன்..
மீ.ஹாஜாஹ் கமால் (மீ.மெ)
மீராப்பள்ளி நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள். மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது மகிழ்ச்சி ஆனால் இனி வரும் காலங்களில் இதை விட அதிகமாக கூட்டத்தை எதிர்பாக்கலாம் ஆகையால் இனி வரும் காலங்களில் பந்தல் அமைக்கப்பட்டால் வெயிலில் நின்று தொழுவதை தவிர்க்கலாம்
மீராப்பள்ளியின் வளர்ச்சிக்கு உழைக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக் கும் அல்லாஹ் நற்கூலியை வழங்க துஆ செய்கிறோம்.
மீராப்பள்ளியின் அழகிய சூழலை கண்முன்னே நிறுத்திய MYPNO இனையதள நிருவாகிகளுக்கு நன்றி. இன்னும் அதிகமாக புகைப்படங்களை வெளியிட்டிறுந்த ாலும் ரசித்திருப்போம் .
மீராப்பள்ளியின் இயற்க்கை சூழழை பாதுகாக்கும் பொருட்டு குளங்களை பராமரித்து பள்ளி மற்றும் ஷாதிமஹால் வளாகம் முழுவதும் மரம் நட்டு வளர்க்க அன்புடன் கோரிக்கை வைக்கின்றோம்
MSHA ALLAH
RSS feed for comments to this post