
அறிவிப்புகள்
பல்ஸ் போலியோ திட்டம்
சேவகன் எழுதும் புதிய தொடர்: நம் தமிழை நாம் அறிவோமா? விரைவில்!
"காலை எழுந்தவுடன் தேநீர் குடிக்கிறோம்", "காலை எழுந்தவுடன் தேனீர் குடிக்கிறோம்" இவற்றுள் எது சரி? தாய்மொழியாம் தமிழில் தான் நமக்கு என்னவொரு அலட்சியம். யாராவது தவறுகளைச் சுட்டிக்காட்டினால் கூட ஆத்திரப்படுகிறோம். அதனால் தான், ஆங்கிலத்தில் எழுதப்படும் மலிவு விலை நாவல்களுக்கும் இலக்கிய மதிப்பீட்டை வழங்க ஆயத்தமாயிருக்கிற நாம் (உலகத்தார்), தமிழில் அருமையான கருத்துகளே வெளிவருவதைக் கண்ணுற்றாலும் அதிற் காணப்படும் பிழைகளால் நாமே மதிப்பிழக்கச் செய்துவிடுகிறோம்.
இளம் கலைஞர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த நிதி உதவி - தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
கடலூர், ஆக.16-
இளம் கலைஞர்களுக்கு கலை நிகழ்ச்சி நடத்த நிதி உதவி அளிக்கப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தன்னார்வ கலை நிறுவனங்களின் வாயிலாக மேடையில் கர்நாடக பாணியில் கலை நிகழ்ச்சிகள் நடத்திட பயிற்சி பெற்றுள்ள இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படுகிறது.
அதன்படி பரதநாட்டியம், வாயப்பாட்டு, கதாகாலட்சேபம், மற்றும் நாதசுரம், வயலின், வீணை, கோட்டுவாத்தியம், மாண்டலின், கிதார், சாக்சபோன், கிளாரினெட் ஆகிய இசைக்கருவிக் கலைஞர்களுக்கும், பக்கவாத்தியங்களான வயலின், மிருதங்கம், கஞ்சிரா. கடம். முகர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளைச் சார்ந்த கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் கலை நிகழ்ச்சி ஒன்றுக்கு குரலிசை, புல்லாங்குழல், ஜலதரங்கம் குழுவிற்கு 2 ஆயிரத்து 800 ரூபாயும், வயலின், வீணை. கோட்டுவாத்தியம் குழுவிற்கு ரூ.ஆயிரத்து 950ம். கதாகாலட்சேபம், நாதசுரம், கிளாரினெட், கிதார் குழுவிற்கு ரூ.4 ஆயிரமும், மாண்டலின், சாக்சபோன் குழுவிற்கு ரூ.3 ஆயிரமும், பரதநாட்டியக் குழுவிற்கு ரூ.5 ஆயிரமும், நிதி உதவியாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கலை நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்யும் வகைக்கு கலை நிறுவனங்களுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது.
இந்த நிதி உதவி பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் இசைத்துறை காலைஞராக இருப்பின் 1.8.2010 முதல் விண்ணப்பிக்கும் நாளில் 16 வயது நிரம்பி 30 வயதிற்கு உட்பட்டவராகவும், இதைப்போன்று பரத நாட்டிய கலைஞர்கள் 15 வயது நிரம்பியவராகவும் 30 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களுக்கு மீண்டும் அதே பிரிவின் கீழ் நிகழ்ச்சி நடத்திட வாய்ப்புகள் வழங்கப்பட மாட்டாது.
இந்த விண்ணப்ப படிவங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தபால் மூலம் பெற விரும்பும் கலைஞர்கள் தன்னுடைய முகவரியுடன் ரூ.5க்கான தபால் தலை ஒட்டி மன்றத்திற்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Source: Daily Thanthi
எஸ்.டி.ஏ.டி. சார்பில் வழங்கப்படும் சிறந்த வீரர், பயிற்சியாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஆக.14-
சிறந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான விருதுக்கு முறையே செப்டம்பர், நவம்பர் மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று எஸ்.டி.ஏ.டி. அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் விளையாட்டில் சர்வதேச, தேசிய அளவில் பல பதக்கங்கள் பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த மிகச்சிறந்த விளையாட்டு வீரர்கள் 2 பேருக்கும், மிகச்சிறந்த வீராங்கனைகள் 2 பேருக்கும் அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருது தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுத் தொகையுடன் வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பதாரர்கள் விருது வழங்கும் 3 ஆண்டுக்கு முன்னதான காலத்தில் நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தனித்திறன் போட்டிகளில் முதல் மூன்று இடங்கள், குழுப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்கள் பெற்றிருக்க வேண்டும்.தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலரையோ அல்லது மாநில விளையாட்டு கழகங்களையோ தொடர்புகொண்டு விவரங்களையும், விண்ணப்பப் படிவங்களையும் பெறலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலர், மாநில விளையாட்டு சங்கங்கள் பரிந்துரையின் மூலம் 30-9-2010-க்கு முன்னர் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116-ஏ, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை-600 084 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
இதேபோல் ஆண்டுதோறும் சர்வதேச மற்றும் தேசிய அளவிலும் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்கும் தலைசிறந்த பயிற்சியாளர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சரின் விருது தலா ரூ.1 லட்சம் பரிசு, பட்டயம் மற்றும் நினைவு பரிசுடன் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2010-2011-ம் ஆண்டுக்கு பயிற்சியாளர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்கள் 5 ஆண்டுகள் தமிழகத்தில் தொடர்ந்து வாழ்ந்து வீரர், வீராங்கனைகளை உருவாக்கி இருத்தல் வேண்டும். சர்வதேச, தேசிய அளவில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் (1.4.2007 முதல் 31.3.2010 வரை) வீரர், வீராங்கனைகளை உருவாக்கிய பயிற்சியாளர்கள், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை முதன்மைக் கல்வி அலுவலர் மூலமும், பயிற்சியாளர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலர் மூலமும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகத்துக்கு 1.11.2010-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேற்கண்ட தகவல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Daily Thanthi
அரசு தொழில்நுட்பத் தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலூர், ஆக. 4:
கடலூர் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
இந்த ஆண்டு நடைபெற உள்ள அரசு தொழில் நுட்பத் தேர்வெழுத விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வருகிற 25ம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன. ஓவியக்கலை, தையல்கலை, அச்சுக்கலை, விவசாயம் மற்றும் கைத்தறிநெசவு ஆகியவற்றில் கீழ்நிலை மற்றும் மேல்நிலை என இருநிலைகளிலும் தேர்வுகள் நடைபெறும். கீழ்நிலைக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட பள்ளி யில் பயின்று எட்டாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேல்நிலைக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் பயின்று எஸ்.எஸ்.எல்.சி தேர்வெழுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வண்ணம் தீட்டுதல் மற்றும் வடிவமைத்தல் பாடங்களில் மேல்நிலைத் தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் அப்பாடத்தின் எந்த உட்பிரிவில் தேர்வெழுத உள்ளார் என்பதை தெளி வாக குறிப்பிட வேண்டும். விண்ணப்பதாரர் ஒரு பாடத்தின் கீழ்நிலை மற்றும் மேல்நிலை ஆகிய இரண்டிலும் ஒரே தேர்வின் போது விண்ணப்பிக்க கூடாது. நடனம் கீழ் நிலை ரூ. 57, மேல்நிலை ரூ. 62ம் இந்திய இசை கூடுதல் செயல்முறை கீழ்நிலை ரூ.27 மேல்நிலை ரூ.37 ம் ஏனைய பாடங்களில் கீழ்நிலையில் ரூ.37 ம், மேல்நிலைக்கு ரூ.47 ம் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தேர்வுகட்டணத்தை அரசு கருவூலத்தில் மட்டுமே கருவூலச்சீட்டு மூலம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி விண்ணப்பபடிவத்தை பயன்படுத்த வேண்டும். வெற்று விண்ணப்பப்படிவங்கள் கடலூர் அரசுத்தேர்வுகள் மண்டலத்துணை இயக்குநர் அலுவலகத்திலும் விண்ணப்பதாரர் தனது இருப்பிட முகவரிக்கு அருகில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலகங்களிலும் வருகிற 25ம் தேதி வரை வழங்கப்படும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கல்வித்தகுதிக்கு ஆதாரமாக சான்றிதழ் நகலையும் தேர்வு கட்டண கருவூலச் சீட்டையும் இணைத்து கூடுதல் செய லாளர்(தொழில்நுட்ப தேர்வு) அரசுத்தேர்வுகள் இயக்ககம் சென்னை &600006 என்ற முகவரிக்கு வருகிற 25ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். உறையின் மீது அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் &நவம்பர் 2010 என எழுதி அனுப்ப வேண்டும். தேர்வுக்கான கால அட்டவணையும் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு விநியோகம் பற்றிய விவரமும் செய்திதாளில் வெளியிடப்படும். தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு விண்ணப்பதாரருக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டாது.
Source: Dinamani














