மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளை உயர்த்தி அறிவித்தார். இதனையடுத்து இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட இருப்பதாகத் தெரிகிறது.
பட்ஜெட் 2010
பெட்ரோல் விலை உயர்வு : இன்று நள்ளிரவு முதல் அமல்
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளை உயர்த்தி அறிவித்தார். இதனையடுத்து இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட இருப்பதாகத் தெரிகிறது.
பட்ஜெட் எதிரொலி : விலை உயரும் - குறையும் பொருட்கள்!
புதுடெல்லி, பிப்.26,2010
மத்திய பட்ஜெட் 2010 -11-ல் இடம்பெற்றுள்ள வரி விதிப்பு மற்றும் வரிச் சலுகை காரணமாக விலை உயர, விலை குறைய வாய்ப்புள்ள பொருட்களின் விவரம்:
மத்திய பட்ஜெட் 2010-11... முக்கிய அம்சங்கள்!
புதுடெல்லி, பிப்.26,2010
2010-11-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதன் முக்கிய அம்சங்களாவன:
* ஒருங்கிணைந்த வளர்ச்சி, முதலீட்டுக்கு ஏற்ற சூழ்நிலையை மேம்படுத்துவது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வெளிப்படையான தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம்
* பட்ஜெட்டில் ரூ.11,08,749 கோடி செலவினம் திட்டமிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.6 சதவீதம் கூடுதலாகும்.
* திட்டச் செலவுகள் ரூ.3,73,092 கோடியாக, திட்டமில்லாச் செலவுகள் ரூ.7,35,657 கோடியாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டச் செலவுகள் 15 சதவீதமும், திட்டமில்லாச் செலவுகளுக்கான ஒதுக்கீடு 6 சதவீதமும் உயர்ந்துள்ளது.
* நிதி பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 சதவீதமாக இருக்கும். இது ரூபாய் மதிப்பில் ரூ.3,81,408 கோடியாக இருக்கும்.
* 2011-12-ம் ஆண்டில் நிதி பற்றாக்குறை 4.8 சதவீதமாகவும், 2012-13-ல் 4.1 சதவீதமாக இருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* நிகர சந்தைக்கடன் ரூ.3,45,010 கோடியாக இருக்கும்.
* நிகர வரி வருவாய் ரூ.7,46,651 கோடியாகவும், வரியில்லா வருவாய் ரூ.1,48,118 கோடியாகவும் இருக்கும்.
* பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.25 ஆயிரம் கோடி திரட்டப்படும்.
* பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.16,500 கோடி அளிக்கப்படும். ...... மேலும்....
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் பிரணாப் முகர்ஜி
புதுடெல்லி, பிப்.26,2010
மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே 2010 -11 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து துவக்க உரையாற்றிய பிரணாப் முகர்ஜி, "நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. பொருளாதார வளர்ச்சியை ரெட்டை இலக்கு எண்ணிக்கையிலான வளர்ச்சியை எட்டுவதற்கு உரிய சவால்களை அரசு சந்தித்து வருகிறது," என்றார்.
பிரணாப் முகர்ஜி துவக்க உரையில் முக்கிய அம்சங்கள்:













