Monday, Sep 06th

Last update:07:11:54 PM GMT

You are here:

கல்வி வழிகாட்டி

அண்ணாமலை பல்கலைக் கழகம் - சிதம்பரம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த 1929 ஆம் ஆண்டு டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரால் தொடங்கப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகள்:

எம்.ஏ. தத்துவம், அப்ளைடு சைக்காலஜி, வரலாறு, அரசியல் அறிவியல், பொருளாதாரம், அப்ளைடு எகனாமிக்ஸ், ஆங்கிலம், அமெரிக்கன் ஸ்டடீஸ், தமிழ், சம்ஸ்கிருதம், மொழியியல், டிரான்ஸ்லேஷன் ஸ்டடீஸ், சோஷியாலஜி, டெவலப்மெண்ட் ஸ்டடீஸ், பாப்புலேஷன் ஸ்டடீஸ், ஹிந்தி டிரான்ஸ்லேஷன், காந்தியன் ஸ்டடீஸ்.

எம்.காம், கோ ஆபரேட்டிவ் மேனேஜ்மெண்ட், மாஸ்டர் ஆஃப் பிசினஸ் ஸ்டடீஸ், மாஸ்டர் ஆஃப் பைனான்சியல் சர்வீசஸ்.

இளநிலைப் படிப்பு:

இசை; முதுநிலை படிப்பு: லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயன்ஸ், இசை.

முதுநிலை டிப்ளமா:

சுற்றுலா, மனித உரிமைகள் மற்றும் அமைதி, ஆர்கைவ்ஸ் கீப்பிங், எகனாமெட்ரிக்ஸ், காந்தியச் சிந்தனை, ராமலிங்கர் தத்துவம், கைடன்ஸ் அண்ட் கவுன்சலிங், கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப், பேங்கிங் லா அண்ட் பிராக்டிஸ், இன்சூரன்ஸ், பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், அப்ளைடு லிங்கியுஸ்டிக்ஸ், பாப்புலேஷன் எஜுகேஷன்.

சான்றிதழ் படிப்பு:

அட்வான்ஸ்ட் டிப்ளமா -பிரெஞ்ச், மொழியியல், இதழியல், நாட்டுப்புறவியல், ரெப்ரோகிராபி அண்ட் நான்புக் மெட்டீரியல்ஸ், ஆங்கிலம் (கம்யூனிகேஷன்), இசை (வாய்ப்பாட்டு).

டிப்ளமா: பிரெஞ்ச், மொழியியல், மொழிகள், இதழியல், நாட்டுப்புறவியல்.

எம்பிஏ, எம்எஸ்சி:

கணிதம் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்துடன்), இயற்பியல், வேதியியல், பயோ கெமிஸ்ட்ரி, புள்ளியியல், மரைன் பயலாஜி அண்ட் ஓசனோகிராபி, கோஸ்டல் ஆக்வாகல்ச்சர், தாவரவியல், விலங்கியல், அப்ளைடு ஜியாலஜி. பிஎட், எம்.எட்., பிபிஎட், பிபிஇஎஸ், எம்பிஇஎஸ்.

பி.இ.: சிவில், சிவில் அண்ட் ஸ்டரக்ச்சுரல், மெக்கானிக்கல், மெக்கானிக்கல் அண்ட் மேனுபாக்ச்சரிங், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கெமிக்கல்.

எம்.இ.: வாட்டர் ரிசோர்ஸ், ஸ்ட்ரக்ச்சுரல், தெர்மல், பவர் சிஸ்டம், புரடக்ஷன், புராசஸ் கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன், கெமிக்கல்.

எம்சிஏ, எம்எஸ்சி (சாப்ட்வேர் என்ஜினியரிங்), எம்எஸ்சி (இன்பர்மேஷன் டெக்னாலஜி), எம்எஸ்சி (கம்ப்யூட்டர் டெக்னாலஜி), எம்.எஸ் (சாப்ட்வேர் என்ஜினியரிங்), எம்எஸ் (இன்பர்மேஷன் டெக்னாலஜி), எம்.எஸ். (கம்ப்யூட்டர் டெக்னால ஜி), எம்.எஸ்சி. இன்டஸ்ட்ரியல் மேத்தமேட்டிக்ஸ்.

பிஎஸ்சி வேளாண்மை, தோட்டக்கலை. டிபார்ம், பிபார்ம், எம்.பார்ம்., எம்.பார்ம் (பார்மஸி பிராக்டிஸ்):

M.sc. Agriculture: Agricultural Economics/Agricultural Entomology, Agricultural Extension/ Agricultural microbiology/ Agronomy/ Agricultural Botony (or) Genetics & Plant Breeding/ Horticulture/ Plant Pathology/ Soil Science & Agricultural Chemistry/ Microbial Bio Technology.

எம்பிபிஎஸ், எம்பிடி, பிபிடி, பிஓடி, பிஎஸ்சி நர்சிங், பிடிஎஸ், எம்டிஎஸ்.:

M.D. (General Medicine, Paediatrics, Anaesthesia, Obstetrics & Gynaecology, General Surgery, Anatomy, Physiology, Biochemistry, Pathology, Microbiology, Pharmacology, Community Medicine, Dermatology, Venereology and Leprosy) (M.S. Opthalmology, Otorhinolaryngology, Orthopaedics)

முதுநிலை டிப்ளமா: Child Health, Anaesthesiology, obstertrics and Gynaecology, OrthoPaedics, Opthalmology, Laryingology and Otology, Medical Radio Diagnosis.

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்புகள்:

எம்.ஏ. ஆங்கிலம் அண்ட் கம்யூனிகேஷன், வரலாறு மற்றும் பாரம்பரிய நிர்வாகம், அரசியல் அறிவியல், அப்ளைடு எகனாமிக்ஸ், அப்ளைடு சோஷியாலஜி, பாப்புலேஷன் அண்ட் டெவலப்மெண்ட், ஹீயூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட், ஊரக வளர்ச்சி.

எம்காம், எம்எல்ஐஎஸ், எம்எஸ்சி கணிதம் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் பாடத்துடன்), புள்ளியியல் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் பாடத்துடன்), இயற்பியல், எலெக்ட்ரானிக்ஸ் சயன்ஸ், வேதியியல், அப்ளைடு ஜியாலஜி, பயோ டெக்னாலஜி, பயோ இன்பர்மேட்டிக்ஸ், மெட்டீரியல்ஸ் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்,

இன்ஸ்ட்ருமெண்டேஷன் அண்ட் இன்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன், சாப்ட்வேர் என்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் டெக்னாலஜி, மைக்ரோபயாலஜி, என்விரான்மெண்டல் சயன்ஸ், ஹெர்பல் சயன்ஸ்.

தொடர்புக்கு:

பதிவாளர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலை நகர்,
கடலூர் மாவட்டம் மாவட்டம் } 630 003.
தொலைபேசி: 04144 - 238248/263/796
இணையதள முகவரி: http://annamalaiuniversity.ac.in

ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவில் படிக்க...

மின்னஞ்சல் அச்சிடுக PDF
ஜெர்மனி:

சென்னை நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலையில் உள்ள மாக்ஸ் முல்லர் பவனில் ஜெர்மன் அகாதெமிக் எக்ஸ்சேஞ்ச் சர்வீஸ் அமைப்பின் பிரிவு செயல்படுகிறது. ஜெர்மன் நாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பது குறித்த விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன்னதாகவே பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இ-மெயில்: இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

ஜெர்மன் கல்வி குறித்து விவரங்கள் அறிய உதவும் இணைய தளங்கள்:

www.campus-germany.de

www.daad.de

www.higher-education-campass.de

www.gateway-to-germany.de

www.student-affairs.de

ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களில் படிப்பது குறித்து விவரங்கள் அறிய:

IDP Education Australia
28, Crystal Lawn, Wallace Garden
20, Haddows Road I Street
Nungambakkam, Chennai 600 006.
E-mail: இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

ஆஸ்திரேலியக் கல்வி நிறுவனங்கள் குறித்த விவரங்களைக் கீழ்க்கண்ட இணைய தளம் மூலமும் அறியலாம்:

www.idp.com

கடலூர் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

1. டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி, வைத்தியநாதபுரம், தொழுதூர் (1995).

மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன். 

2. கிருஷ்ணசாமி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, கடலூர் (2001).

கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.

தேசிய கடற்படை பொறியியல் கல்லூரி

மின்னஞ்சல் அச்சிடுக PDF
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள தேசிய கடற்படை பொறியியல் கல்லூரியில் பி.டெக். படிப்பை இலவசமாகப் படிக்கலாம்.

கடற்படையில் மெரைன், எலெக்ட்ரிக்கல்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங், ஆர்க்கிடெக்சர் ஆகிய பிரிவுகளுக்குத் தேவைப்படும் அதிகாரிகளை உருவாக்குகிறது இக்கல்லூரி.

பி.டெக். படிப்பில் ஆண்கள் மட்டுமே சேர முடியும். பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் சராசரி 75 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் டூ வகுப்பில் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம்.

உடற் தகுதி முக்கியம். அதாவது, உயரம் 157 செ.மீ, மார்பளவு 5 செ.மீ. விரிவு இருக்க வேண்டும். நல்ல கண்பார்வை இருக்க வேண்டும்.

பிளஸ் டூ மதிப்பெண் மற்றும் சர்வீஸ் செலக்ஷன் போர்டு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியுடையோர் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். நேர்முகத் தேர்வில் உளவியல் தேர்வு, குழு விவாதம் ஆகியவையும் இடம் பெற்றிருக்கும்.

தேர்வு செய்யப்படுவோருக்கு கோவாவில் உள்ள இந்திய கடற்படை அகாதெமியில் 6 மாதங்கள் அடிப்படைப் பயிற்சி தரப்படும். அதன்பின் புனே கடற்படை பொறியியல் கல்லூரியில் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். அங்கு 4 ஆண்டுகள் படித்த பின் பி.டெக். பட்டம் வழங்கப்படும். புதுதில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இப்பட்டத்தை அளிக்கும்.

சரி, இப்படிப்பின் சிறப்பு என்ன என்றுதானே கேட்கிறீர்கள். நான்கு ஆண்டுக்குமான உணவு, உடை, விடுதி செலவுகள், பயிற்சிக் கட்டணம் அனைத்தையும் கடற்படையே ஏற்றுக்கொள்கிறது. எனவே ஒரு நயா பைசா செலவு இல்லாமல் பயிற்சியை முடித்து விடலாம். அது மட்டும்தானா? படித்து முடித்த கையோடு நல்ல வேலை.

ஆறு மாதப் பயிற்சிக்குப் பிறகு லெப்டினென்ட் பதவி அளிக்கப்படும். அப்போது மாதம் ரூ.11,800 ஊதியம் கிடைக்கும். படிகள், சலுகைகள் தனி. வைஸ்-அட்மிரல் வரை பதவி உயர்வு பெறலாம்.

http://www.nausena-bharti.nic.in/ என்ற இணைய தளத்தில் முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம். சென்னையில் கடற்படை அலுவலகத்தை அணுகியும் விவரம் பெறலாம்.

Source: Dinamani

8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு - வெற்றி பெற்றால் உதவித்தொகை கிடைக்கும்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

சென்னை, ஆக.15-

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க நடத்தப்படும் தேசிய திறனாய்வுத்தேர்வு நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இதற்கு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேசிய திறனாய்வுத்தேர்வு மற்றும் தேசிய வருவாய்வழி திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை வழங்க மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு நவம்பர் மாதம் 21-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் 16-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை வழங்கப்படுகின்றன.

அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் தற்போது 8-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவ-மாணவிகள் தேசிய திறனாய்வுத்தேர்வு எழுத தகுதி உடையவராவர். 7-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 70 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேசிய வருவாய்வழி திறன் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வுக்கு அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் தற்போது 8-ம் வகுப்பு படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

7-ம் வகுப்பில் 55 சதவீத மதிப்பெண் (எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 55 சதவீதம்) அவசியம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.11/2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்த 2 திட்டங்களுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானது. ஒரு மாணவருக்கு ஒரு திட்டத்தின்கீழ் மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வுக்கான விண்ணப்ப படிவங்களை சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அலுவலகம் மற்றும் திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர், சென்னை ஆகிய இடங்களில் உள்ள தேர்வுத்துறை மண்ட துணை இயக்குனர் அலுவலகங்களில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ளலாம். பள்ளிக்கல்வி இணையதளத்தில் (ஷ்ஷ்ஷ்.ஜீணீறீறீவீளீணீறீஸ்வீ.வீஸீ) டவுண்லோடு செய்தும் விண்ணப்பம் பெறலாம்.

தேர்வுக்கட்டணம் ரூ.50. ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களின் தேர்வுக்கட்டணத்தை வசூலித்து அதை மொத்தமாக அரசு கருவூலத்தில் செலுத்த வேண்டும். தேசிய திறனாய்வு தேர்வு விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட துணை இயக்குனர் அலுவலகத்திற்கும், தேசிய வருவாய்வழி தேர்வுக்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு வசுந்தராதேவி கூறியுள்ளார்.

Source: Daily Thanthi

பக்கம் 1 - 3