
பரங்கிப்பேட்டை: நேற்று முன்தினம் மஹ்முதியா ஷாதி மஹாலில் மீலாது மாநாடு நடைப்பெற்றது. மீராப்பள்ளி இமாமின் கிராஅத்துடன் பிற்பகல் 3 மணிக்கு துவங்கியது இம்மாநாடு. நகர ஜமாஅத்துல் உலமா பேரவை தலைவர்
காஜா முயினுதீன் மிஸ்பாஹி வாழ்த்துரை வழங்க, அதிரை எம். முஹம்மது தாஹா மதனி நபிபுகழ் கவிதை வழங்கினார்.
தௌலத்துன்னிசா மகளிர் கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் உமரி உரைக்கு பிறகு, அல்மதரஸதுல் மஹ்முதியா முதல்வர் சித்தீக் அலி பாகவி மற்றும் ஆஸ்திலேலியன் பள்ளி ஆசிரியர் லியாகத் அலி நபி புகழ் பாடலை பாடினர்.

சிதம்பரம் அல்மதரஸதுல் ஆலியா முதல்வர் மௌலவி கனியூர் எம்.ஒய். இஸ்மாயில் நாஜி, சென்னை கானத்தூர் அரபிக்கல்லூரி நிறுவனர் எ. முஹம்மது ஷப்பீர் அலி பாகவி, இனாம்குளத்தூர் ஜே.ஐ.யு. அரபிக்கல்லூரி நிறுவனர் முஹம்மது ஷாஹுல் ஹமீது ஜமாலி ஆகியேர் சிறப்புரையாற்றினர். மாநாட்டு முடிவில் ஷேக் ஆதம் மழாஹிரி மாநாட்டு தீர்மானத்தை வாசித்தார். பெண்களுக்கு தனியிட வசதியுடன் ஏற்பாடு செய்யப்ட்டிருந்த இம் மீலாது மாநாட்டில் கலிமா சேக் அப்துல் காதர், ஜமாத் தலைவர் முஹம்மது யூனுஸ், செயலாளர் ஆரிப் மற்றும் ஆண்கள்-பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
- Comments
-
|2010-03-06 19:56:59 hajasadiqDear guys,
Try to avoid these kind of Sirkku. This is not a one our Nabi, told.........Dont fol
low the Sathan's Foot. Dont put it in your website. Even this will lead us to Hell..................
...Mr. N........................N, i believe no everyone in PNO think..........you are Thouheed....
.......................
Insh Allah, these kind of things will not happend in the future.
Sadiq
!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved."
| < முன் | அடுத்தது > |
|---|
