கொளத்துமோடு – 8
ஷாஜஹான்: அஸ்ஸலாமு அலைக்கும்
எல்லோரும்: வ அலைக்குமுஸ் ஸலாம்
பாபர்: வாங்க என்னா எதோ ஒரு யோசனைல வரிங்க?
ஷாஜஹான்:: யோசனைல்லாம் ஒன்னோம் இல்லே...அப்றம் அஞ்சி சி வந்துடிச்சா?
ஜஹாங்கீர்: எங்களுக்கு யாரோம் அஞ்சி கோடி தரதா சொல்லேயே…!
ஷாஜஹான்: அட நீங்க வேறே…… சிதம்பரத்துலேந்து வர அஞ்சு சி பஸ்-ஸ கேட்டாக்க , நீங்க என்னயே கிண்டல் பண்றிங்க
பாபர்: இது வரக்கோம் வரல, இன்னோம் ஒரு பத்து நிமிஷத்துலே வரோம்
ஜஹாங்கீர்: என்னா சேதி?
ஷாஜஹான்:: நம்ம ஒளரங்கசீப், சிதம்பரம் போய், ப்ளட் டெஸ்ட் பண்ணிட்டு அஞ்சி சி-லே வரேன்னு போன் பண்ணி சொன்னாரு ,அதான் கேட்டேன்.
பாபர்: ஆமாம், ப்ளட் டெஸ்ட் பண்ண சிதம்பரம் நீலா லேப்-க்கு தானே போ வேண்டியதா இருக்கு,
ஜஹாங்கீர்: சரியா சொன்னீங்க
ஷாஜஹான்: பாண்டிச்சேரிலே இக்கிற ஒரு பிரபலமான ஆஸ்பத்திரியோட பிராஞ்ச அகரத்துலே ஓப்பன் பண்ண போறதா கொஞ்ச நாளக்கி முன்னாடி சொன்னாங்களே அதப்பத்தி உங்களுக்கு தெரியுமா?
பாபர்: உங்கள மாதிரி தான் நானும் கேள்விபட்டேன், ஆனா இன்னைக்கி என்னா நெலமன்னு தெரிலே.
ஜஹாங்கீர்: நம்மூர் இன்னும் மருத்துவத்துலே முன்னேற வேண்டியதா தான் இருக்கு.
ஷாஜஹான்: ஆமா…ஆமா… ஏறக்கொறய 25000 மக்கள் தொகை இக்கிற நம்மூர்லே மருத்துவ வசதி சரி இல்லே தான்
ஜஹாங்கீர்: கூடுதலான வைத்தியத்துக்கு பஹலானாலோம் ராத்திரியானாலோம், கடலூர் ஆஸ்பத்திரிக்கி தானே போ வேண்டியதா இக்கிது.
பாபர்: எல்லா வசதியும் உள்ள ஒரு ஆஸ்பத்திரி நம்மூர்லே அமைஞ்ச நம்ம ஊர் மக்களுக்கு ரொம்ப வசதியா இக்கோம்
ஜஹாங்கீர்: அப்றம்..போன வாரம் இங்கே ஒக்காந்து பேசும் போது மரம் நடுறத பத்தி பேசுனோம் ஞாபகம் இக்கிதா?
ஷாஜஹான்: ஆமா…இப்ப என்ன அதுக்கு ?
பாபர்: ஒரு சந்தோஷமான சேதி, ப்ளஸ் டூ, பத்தாவது எக்ஸாம் முடிஞ்ச பின்னாலே ஸ்டூடண்ஸ்லே கொஞ்சம் பேர் ஒரு குழுவா சேர்ந்து மரம் நடுற முயற்சிலே தீவிரமா எறங்க போறதா, ஒரு சேதி வந்துச்சி
ஜஹாங்கீர்: அப்படியா..! ரொம்ப சந்தோஷம், ஊர் பசுமையா மாறுனா எல்லோருக்கோம் நல்லது தானே.
ஷாஜஹான்: சரி வாங்க, இந்த சந்தோஷமான சேதியோட கெளம்புவோம், டைம் ஆயிடிச்சி
(கொளத்துமோடு கூட்டம் கலைந்தது)
- Comments
-
|2010-03-04 14:06:37 Nazir Ubaidullah - இரத்த பரிசோதனை நிலையம்எனக்கு தெரிந்த வகையில் நம்ம ஊரை சார்ந்த நான்கு பெரிய டாக்டர்கள் உள்ளார்கள் அவர்களில் யாராவது ஒருவர்
வியாபார நோக்கில் இல்லாமல் நம் ஊர் மக்களின் நலனை கருதி ஒரு இரத்த பரிசோதனை நிலையம் துவங்கினால் கால ப
ோக்கில் அது லாபகரமாக இருக்கும் அதே சமயம் மக்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும்.
ஆமாம் ! அங்கயற்கன
்னி கிளினிக்,பிரேம்குமார்(அமுதா கிளினிக்) மற்றும் அரசு மருத்துவமனையிலும் இந்த வசதியுள்ளதாக கேள்வி !
மேலும் அரசு மருத்துவ மனையை மக்கள் குறிப்பாக நம் சமுதாய மக்கள் சரி வர பயன்படுத்தி கொள்வதில்லை.ச
ுகாதார அமைச்சர் MRK யின் ஆதங்கமும் அதுதான் வருகை பதிவேட்டின் அடிப்படையில் தான் விரிவாக்கமும் இருக்கு
ம் என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
நஜீர் உபைதுல்லாஹ்
தம்மாம்
!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved."
| < முன் | அடுத்தது > |
|---|
